சோழபுரத்தில் 13ஆம் நுாற்றாண்டு ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை:சோழபுரத்தில் சிங்க சின்னம் பொறித்த 13ஆம் நுாற்றாண்டு அரியவகை ஆசிரியம் கல்வெட்டை தொல்நடைக்குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.

சிவகங்கை அருகே சோழபுரத்து கண்மாய்பகுதியில் வேறுபட்ட உருவம் பொறித்த கல் ஒன்று கிடப்பதாக சிவகங்கை தொல்நடைக்குழுவிற்கு அதே பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் தொல்நடைக்குழு நிறுவநர் காளிராசா, செயலர் நரசிம்மன் அந்த கல்வெட்டை ஆய்வு செய்து கூறுகையில், இந்த கல்வெட்டு இரண்டரை அடி உயரமும், ஒரு அடி நீளமும் உள்ளது. 9 வரிகளாக சொற்கள் மடக்கி எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டின் இறுதியில் நடுவில் அம்பும் இரண்டு பகுதிகளில் மங்களச் சின்னமான குத்துவிளக்கு உள்ளது. எட்டி எரியன் எனும் தலைவன் அரசப்பிரதிநிதி சிங்கக்கொடி வீரருக்கு (ஆசிரியம்) பாதுகாப்பை அளித்த செய்தியை இக்கல்வெட்டு எழுத்துக்கள் தெரிவிக்கிறது. கல்வெட்டு எழுத்தின் வடிவத்தை கொண்டு இது 13ஆம் நுாற்றாண்டை சேர்ந்தது என்று கண்டுப்பிடிக்கப்பட்டது..

Advertisement