ஆவின் பால் பண்ணை வளாகத்தில் தீ விபத்து 

விழுப்புரம்: விழுப்புரம் ஆவின் நிறுவன வளாகத்தில், இருந்த புதர்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம், ஜானகிபுரத்தில், ஆவின் கூட்டுறவு பால்உற்பத்தி மையத்தின் தலைமையகம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் நேற்று கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்ய இருப்பதாக வருவதை அறிந்த, ஆவின் ஊழியர்கள், ஆவின் பால்பண்ணை வளாகத்தின் முகப்பில் உள்ள காலியிடத்தில் இருந்த புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த குப்பைகளுக்கு தீ வைத்ததால், காலை 10:00 மணிக்கு புதர் தீ பிடித்து எரிந்தது. தீ வேகமாக பரவி அங்குள்ள வாகன நிறுத்தும் இடம் மற்றும் பயன்படுத்தப்படாத டீசல் பிடிக்கும் பழைய இடத்தை நெருங்கியது

இதனால் அச்சமடைந்த ஆவின் ஊழியர்கள், விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விழுப்புரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைத்தனர். தீப்பிடித்து எரிந்தது, காலியிடம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Advertisement