பரிதிமாற் கலைஞர் பிறந்த தின விழா
திருநகர்: தமிழ் செம்மொழிக்கு முதன்முதலாக குரல் கொடுத்த சூரிய நாராயண சாஸ்திரி (பரிதிமாற் கலைஞர்) பிறந்த தினம் மதுரை விளாச்சேரியிலுள்ள அவரது நினைவிடத்தில் நடந்தது. சிலைக்கு கலெக்டர் நிஷாந்த்கிருஷ்ணா, எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன், கல்லாணை, கோபிசன், ஆர்.டி.ஓ., கருணாகரன், தாசில்தார் தானமூர்த்தி, ஆர்.ஐ.,சித்ரா தேவி, வி.ஏ.ஓ. காமேஸ்வரன், ஊராட்சி ஒன்றிய கமிஷனர் லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா, ஊராட்சி செயலாளர் ராஜமாணிக்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தாம்ப்ராஸ் மாநில துணைத்தலைவர் ஜெயஸ்ரீ தலைமையில் ஆலோசகர் கணபதி நரசிம்மன், செயலாளர் ஸ்ரீகுமார், மாவட்ட மகளிரணி செயலாளர் உமாகுமார், பொருளாளர் நடராஜன், கிளைத் தலைவர் ரவி, நிர்வாகிகள் நரசிம்மன், நடராஜன், அன்னபூரணி, வசந்த கோகிலம், பவானி, அம்மா கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ணய்யர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் பொதுச் செயலாளர் ஸ்ரீராமன், நிர்வாகிகள் குழந்தைசாமி, பிச்சை, விஜயராகவன், சங்கரபாண்டியன் விஸ்வநாதன் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பரிதிமாற் கலைஞர் பேரன்கள் கோவிந்தன், சக்திகல்யாணராமன், பிரபா மாலை அணிவித்தனர். ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்றத் தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் அண்ணாமலை, காளிதாசன், அரவிந்தன், வேட்டையார், மக்கள் நல மையத் தலைவர் செல்வராஜ், ரவிச்சந்திரன், கே.பி. விளையாட்டு குழு நிர்வாகி பாஸ்கர் பாண்டியன் மாலை அணிவித்தனர். தி.மு.க., தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் விமல் தலைமையில் நிர்வாகிகள் வெற்றி, சுந்தரபாண்டியன் முருகன், கார்த்திக், பிச்சை, சிபி மரியாதை செலுத்தினர். காங்., மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும்
-
ரூ.3 கோடி மதிப்பு கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்
-
சேதமடைந்த சாலையால் முகுந்தகிரி மக்கள் அவதி
-
விளையாட்டு// மாநில டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை அணியினர் சாம்பியன்
-
தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
-
செய்திகள் சில வரிகளில்...
-
பெருங்களத்துாரில் மதுக்கடையை மூட இரவில் பகுதிமக்கள் சாலை மறியல் கத்தியுடன் ‘குடி’மகன்கள் திரிவதால் அச்சம்