வட நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்பணி: முதல்வர் விஜய் ஆய்வு

மாமல்லபுரம்: வட நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்பணியை முதல்வர் விஜய், பேட்டரி வாகனத்தில் ஆய்வு செய்தார்.


சென்னையின் குடிநீர் தேவையை தீர்ப்பதற்காக மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, வட நெம்மேலியில் தினமும் 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் இறுதி கட்டத்தில் உள்ளன.


இந்நிலையில், இங்கு வந்த முதல்வர் விஜய் இந்த பணிகளை ஆய்வு செய்தார். பேட்டரி வாகனத்தில் சென்ற முதல்வர் விஜய், திட்ட செயல்பாடு, உற்பத்தி திறன், விரிவாக்கப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார். முதல் அலகு மற்றும் 2வது அலகு என இரண்டு ஆய்வு செய்ய உள்ளார்.

Advertisement