கீழச்சாலுாரில் வறுமையில் வாடிய குடும்பத்தினர் மீட்பு     

சிவகங்கை:சிவகங்கை அருகே கீழச்சாலுாரில் வறுமையில் இருந்த குடும்ப உறுப்பினர்களை சிங்கப்பெண் அதிரடிப்படையினர் மீட்டு, கலெக்டர் மூலம் குழந்தைகள் நல இல்லத்தில் சேர்த்தனர்.சிவகங்கை அருகே கீழச்சாலுார் கூலி தொழிலாளி ரமேஷ். இவரது மனைவி பாப்பா. இவர்களுக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடிசை வீட்டில் வறுமையான சூழலில் வசித்து வந்தனர். இவர்களது மகன்கள் உழைக்க முடியாத நிலையில் உள்ளனர். அதே போன்று 12 வயது இரு மகள்களும் கல்வியை தொடர முடியாமல் குடும்ப வறுமையால் தவித்து வந்தனர்.

இந்நிலையில் கீழச்சாலுாரில் ‛சிங்கப்பெண் அதிரடி திட்டம்' குறித்த விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர். எஸ்.ஐ., கங்காதேவி தலைமையிலான போலீசார் விழிப்புணர்வு அளித்தபோது, அங்கிருந்தவர்கள் இக்குடும்பத்தினர் வறுமையில் வாடுவது குறித்து தெரிவித்தனர். உடனே சிங்கப்பெண் அதிரடிப்படையினர் இக்குடும்ப உறுப்பினர்களை மீட்டு, கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். குழந்தைகள் நல அலுவலர் விசாரணைக்கு பின், குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் அவர்களை ஒப்படைத்தனர். ///

Advertisement