காலையில் குறைந்த தங்கத்தின் விலை மாலையில் உயர்ந்தது
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில் மாலையில் 800 ரூபாய் உயர்ந்தது.
தமிழகத்தில் நேற்று (ஜூலை 08), ஒரே நாளில் தங்கம் விலையில், மூன்று முறை மாற்றம் ஏற்பட்ட நிலையில், சவரனுக்கு, 1,200 ரூபாய் குறைந்தது. இதனால், ஒரு சவரன் 1,06,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.45 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,760க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.13,220க்கும் வர்த்தகமானது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிலோ வெள்ளி ரூ.2.45 லட்சத்திற்கு விற்பனையானது.
ஆனால் மாலையில் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,06,560க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 100 ரூபாய் உயர்ந்து ரூ.13,320 ஆக விற்பனை ஆகிறது.
தற்போது மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், கடந்த சில தினங்களாக சரிந்து வந்த தங்கம், வெள்ளி விலை உயருமோ? என்ற அச்சம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும்
-
இறகுப்பந்து போட்டி
-
நலம் ஏ.ஐ., செயலியில் வாட்ஸ்ஆப் எண்ணில்வீட்டில் இருந்தவாறு வெளிநோயாளி சீட்டு பதிவு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அறிமுகம்
-
போலீஸ் செய்திகள்... விபத்தில் முதியவர் பலி
-
ரூ.14 கோடி வங்கி மோசடியில் வழக்குப்பதிய போலீசார் தாமதம்
-
குறுவட்ட கபடிபோட்டி மாணவிர்கள் ஆர்வம்
-
முதல்வர் விஜய் தலைமையில் 16ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்