மஹாராஷ்டிராவில் புரட்டியெடுக்கும் கனமழை; நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3000 சிலிண்டர்கள்
மும்பை: மஹாராஷ்டிராவில் பெய்து வரும் தொடர் கனமழையால் காஸ் நிரப்பும் ஆலையில் இருந்த 3,000 சிலிண்டர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இதில், காஸ் நிரப்பப்பட்ட மற்றும் காலியானவை என சுமார் 3,000 எல்பிஜி சிலிண்டர்கள் பாதாளகங்கா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், ஆற்றில் அடித்து வரப்படும் சிலிண்டர்களைத் தொட வேண்டாம் என்று அப்பகுதி மக்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் யாரும் எந்தவித ஆபத்தான முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்றும், ஆற்றிலோ அல்லது ஆற்றின் அருகிலோ எல்பிஜி சிலிண்டர்கள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
@block_B@
டில்லிக்கு ரெட் அலர்ட்
தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் டில்லி மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு அதி தீவிர கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.block_B
தலைநகர் டில்லியில் கொட்டிய கனமழை காரணமாக, சாலைகளில் ஆறு போல வெள்ள நீர் பாய்கிறது.
கனமழை காரணமாக, டில்லியின் சதர் பஜார், கிரேட்டர் கைலாஷ், பதர்பூர், நசீர்பூர், டெலிவாரா, மஹாவீர் பஜார், ஸ்வரூப் நகர், குஷக் ரோடு, முன்ரிகா, துவாரகா, விகாஸ் மார்க், கிழக்கு டில்லி, புது டில்லி ரயில் நிலைய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
அதேபோல, டில்லியின் முக்கிய சாலைகளான ரிங் ரோடு, அவுட்டர் ரிங் ரோடு, டில்லி - நொய்டா எக்ஸ்பிரஸ்வே, தேசிய நெடுஞ்சாலை எண் 48ல் தவுலா கான், மகிபால்பூர், ரஜோக்ரி பகுதிகளில் வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது.
கர்நாடகா மழை பற்றி செய்திகளே வருவதில்லை ஏன்?
மொத்த சிலிண்டருக்கும் கணக்கு எழுதி விடுவார்கள்
சிலிண்டர் விக்கிற விலைக்கு 3000 சிலிண்டரை இப்படி விட்டு இருக்காங்க ஆத்துல
இப்பொழுது அந்த அடித்துச்செல்லப்பட்ட சிலிண்டர்களை யார் மீட்டெடுப்பார்கள்? பொதுமக்கள் யாராவது அதை எடுத்துகொண்டுபோனால் என்ன செய்வீர்கள்?