மது போதையில் ஆய்வு பணி: கூட்டுறவு அதிகாரி 'சஸ்பெண்ட்'
காஞ்சிபுரம்:மது போதையில் ஆய்வு பணியில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி மேலாளர், நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செவிலிமேடு கிளை உதவி மேலாளராக முரளி, தலைமையிலான மூவர் கொண்ட குழுவினர், முத்தியால்பேட்டை கூட்டுறவு வேளாண் கடன் சங்கத்திற்கு, கடந்த 3ம் தேதி ஆய்விற்கு சென்றுள்ளனர்.
மத்திய கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் வாங்கியுள்ள பயிர் கடனை குறிப்பிட்ட அளவு தள்ளுபடி செய்வதற்கான, ஆவணங்களை தயாரிப்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, உதவி மேலாளர் முரளி, மது போதையில் இருந்ததாக, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் சிவமலரிடம் புகார் அளக்கப்பட்டது.
இதையடுத்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், உதவி மேலாளர் முரளிக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் அறிக்கையில், முரளி போதையில் இருந்தது நேற்று உறுதியானது. இதையடுத்து, முரளியை, பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் சிவமலர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்
-
இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்: பணியாளர் நலச் சங்கம் வலியுறுத்தல்
-
இரட்டைக் கொலை: மேலும் இருவர் கைது
-
மூணாறில் நிலச்சரிவு அபாயம்: பயணிகள் வருவதை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்
-
பழநி முருகன் கோயில் சேவைகளுக்கு அலைபேசி செயலி வழி முன்பதிவு
-
சுற்றுலா வேன்-கார் மோதல்: ஒருவர் பலி; 14 பேர் காயம்
-
மேகமலை புலிகள் காப்பக பகுதியில் இனி எந்த கட்டுமானத்திற்கும் அனுமதியில்லை: பட்டா காடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் திட்டம்