சிவில் நீதிபதி எனக்கூறி ரூ.5 லட்சம் மோசடி: டி.ஐ.ஜி.,யிடம் பெண் வழக்கறிஞர் புகார்
விழுப்புரம்: சிவில் நீதிபதி எனக்கூறி மோசடி செய்து 5 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் பெண் வழக்கறிஞர் மனு கொடுத்தார்.
விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் சேகர் மகள் ஹேமலதா, 26; கொடுத்துள்ள மனு;
வழக்கறிஞரான நான் சென்னை ஐகோர்ட்டில் பயிற்சி பெற்று வருகிறேன். கடந்த 6 மாதங்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த ஒருவருடன், இன்ஸ்டாகிராமில் அறிமுகம் ஏற்பட்டது.
அவர், நான் சிவில் நீதிபதி எனக்கூறி என்னிடம் பல தவணைகளாக 5 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாயை வாங்கினார்.
அவர் சிவில் நீதிபதி எனக்கூறியது உண்மையில்லை என நாளடைவில் எனக்கு தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை திருப்பிக்கேட்டபோது கொடுக்காமல் ஏமாற்றினார்.
இது குறித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகார் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை.
எனவே, சிவில் நீதிபதி எனக்கூறி ஏமாற்றிய நபர் மீது வழக்குப் பதிந்து பணத்தை பெற்றுத்தர டி.ஐ.ஜி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்: பணியாளர் நலச் சங்கம் வலியுறுத்தல்
-
இரட்டைக் கொலை: மேலும் இருவர் கைது
-
மூணாறில் நிலச்சரிவு அபாயம்: பயணிகள் வருவதை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்
-
பழநி முருகன் கோயில் சேவைகளுக்கு அலைபேசி செயலி வழி முன்பதிவு
-
சுற்றுலா வேன்-கார் மோதல்: ஒருவர் பலி; 14 பேர் காயம்
-
மேகமலை புலிகள் காப்பக பகுதியில் இனி எந்த கட்டுமானத்திற்கும் அனுமதியில்லை: பட்டா காடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் திட்டம்