கோட்டக்குப்பத்தில் கடலில் மூழ்கி கோயம்புத்துார் வாலிபர் பலி
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே சுற்றுலா வந்த வாலிபர், கடலில் குளித்தபோது மூழ்கி இறந்தார்.
கோயம்புத்துார், செல்லாம்பனுார் ஜாகீர் நாயக்கர் பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம் மகன் சிவபிரகாஷ், 22; பெங்களூருவில் தனியார் கல்லுாரியில் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் 5 பேருடன், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார்.
அனைவரும், கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
நேற்று காலை சிவப்பிரகாஷ், தனது நண்பர்களுடன் தந்திரயான்குப்பம் அருகே கடலில் குளித்துள்ளார். அப்போது ராட்சத அலையில் சிக்கி கடலில் இழுத்துச் செல்லப்பட்டார்.
உடன், அப்பகுதி மீனவர்கள், கடலுக்குள் இறங்கி, சிவபிரகாஷை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்: பணியாளர் நலச் சங்கம் வலியுறுத்தல்
-
இரட்டைக் கொலை: மேலும் இருவர் கைது
-
மூணாறில் நிலச்சரிவு அபாயம்: பயணிகள் வருவதை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்
-
பழநி முருகன் கோயில் சேவைகளுக்கு அலைபேசி செயலி வழி முன்பதிவு
-
சுற்றுலா வேன்-கார் மோதல்: ஒருவர் பலி; 14 பேர் காயம்
-
மேகமலை புலிகள் காப்பக பகுதியில் இனி எந்த கட்டுமானத்திற்கும் அனுமதியில்லை: பட்டா காடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் திட்டம்