உளுந்துார்பேட்டையில் திரிந்த நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை நகராட்சி பகுதிகளில் திரிந்த நாய்களை கருத்தடை அறுவை சிகிச்சைக்காக நகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர்.
உளுந்துார்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்து பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தியதால் கடும் அவதியடைந்து வந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரையும் நாய்கள் கடித்து மருத்துவமனையில் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாய்களின் தொல்லை குறித்து பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் புஷ்ரா உத்தரவின் பேரில், நகராட்சி ஊழியர்கள் நகராட்சி பகுதி தெருக்களில் சுற்றி திரிந்த 30க்கும் மேற்பட்ட நாய்களை நேற்று வலைகள் மூலம் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சைக்காக திருக்கோவிலுார் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– ‘சுழற்சி முறை சாகுபடியால் நிறைவான வருமானம்!’
-
மஹாராஷ்டிராவில் புரட்டியெடுக்கும் கனமழை; நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3000 சிலிண்டர்கள்
-
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு; இரு மருத்துவர்களிடம் விசாரணை
-
முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்; புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்
-
தங்கம் விலை இன்றும் சரிவு; சவரனுக்கு ரூ.240 குறைந்தது
-
எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் முதல் இரவு அறை போல அலங்காரம்; டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்