பஸ் ஸ்டாண்டில் உரசிகொண்ட இரு பஸ்கள்: படிக்கட்டு சேதம்
கடலாடி:
கடலாடி பஸ் ஸ்டாண்டில் முதுகுளத்துாரில் இருந்து திருச்செந்துார் சென்ற பஸ்சும் கோவையில் இருந்து கடலாடி சென்ற பஸ்சும் உரசியதால் படிக்கட்டு உள்ளிட்ட பக்கவாட்டு பகுதியில் சேதம் ஏற்பட்டது.
கடலாடி பஸ் ஸ்டாண்டின் நுழைவாயில் பகுதி முதல் வெளியேறும் பகுதி வரை இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு வாகனங்களால் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் சிரமத்துடன் பஸ்களை நகர்த்தி வருகின்றனர்.
நேற்று மாலை 6:00 மணிக்கு முதுகுளத்துாரில் இருந்து திருச்செந்துார் சென்ற பஸ்ஸும் கோவையில் இருந்து கடலாடி சென்ற பஸ்ஸும் அருகருகே வந்து இடித்துக் கொண்டதால் படிக்கட்டு உள்ளிட்ட பக்கவாட்டு பகுதியில் சேதம் ஏற்பட்டது.
போக்குவரத்தை ஒழுங்கு செய்வதற்கு கடலாடி போலீசார் கூடுதல் எண்ணிக்கையில் முன்வர வேண்டும். ரோட்டோரத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.