பள்ளி மாணவி தற்கொலை

காரைக்கால்: காரைக்காலில் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு செல்ல தாய் அறிவுறுத்தல் மனவேதனையில் மகள் தூக்குபோட்டு தற்கொலை.

காரைக்கால் பூவம் மாதா கோவில் தெருவை சேர்ந்த சகாயராஜ். எலக்ட்ரீசியன். இவரது மனைவி ரெஜினாமேரி இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் மூத்த மகள் ஜெசிமா,17; அரசு பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். இவருக்கு மாதவிடாய் பிரச்னை இருந்துவந்தது. இதனால் அடிக்கடி விடுப்பு எடுத்துவந்தார். ஆசிரியர்கள் அவரது தாயிடம் பள்ளி பிளஸ்2 படிப்பதால் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு ஜெசிமா வரும்படி கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லுவதாக கூறிவிட்டு ஜெசிமா சென்றுள்ளார். ஆனால் மகள் சாப்பிடவில்லை என்று தாய் பள்ளிக்கு உணவு எடுத்துசென்றபோது அவர் பள்ளிக்கு செல்லவில்லை எனத் தெரிந்தது. பின வீட்டுக்கு வந்து பார்த்த போது ஜெசிமா வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாது தெரியவந்தது.

புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement