ஆக்கிரமிப்பு கடைகள்: த.வெ.க.,வினர் புகார்
சிவகங்கை:சிவகங்கை நகராட்சியில் உரிய அனுமதியின்றி ஆக்கிரமித்து வைத்துள்ள பெட்டி கடைகளை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் ஸ்டேஷனில் த.வெ.க.,வினர் புகார் அளித்துள்ளனர்.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை நகரில் பஸ் ஸ்டாண்ட், கோர்ட்வாசல், தெப்பக்குளம் பகுதி, சிவன்கோவில் எதிரில், காந்திவீதி, அம்பேத்கர் சிலை அருகே உள்ளிட்ட இடங்களில் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக திடீரென பெட்டிகள் வைத்து கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடை உரிமையாளர்களிடம் கடை அமைப்பதற்கான நகராட்சி அளித்த உரிய உத்தரவு ஏதும் இல்லை என்றும், உரிய அனுமதியின்றி மின் இணைப்பு கொடுத்துள்ளதாகவும், மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க நகர் த.வெ.க.,வினர் சிவகங்கை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.