உலக சாக்லேட் தினம்
குழந்தைகள் மட்டுமல்லாமல் பலருக்கும் பிடித்தமானது 'சாக்லேட்'. உலகில் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் ஜூலை 7ல் உலக சாக்லேட் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மகிழ்ச்சியின் வெளிப்பாடாக சாக்லேட் பரிமாறப்படுகிறது.
முதன்முதலில் 1550ல் ஐரோப்பாவில் சாக்லேட் அறிமுகமானது. இது 'கோகோ' மர கொட்டையின் விதைகளில் இருந்து பெறப்படும் கொழுப்பு பாகத்தின் கலவையை சர்க்கரை, பால், பல இடு பொருட்களை சேர்ப்பதன் மூலம் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. இதில் பல வகைகள் உள்ளன. உலகில் கோகோ உற்பத்தியில் ஆப்ரிக்கா (30 சதவீதம்) முன்னணியில் உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement