விசாரணைக்கு ஆஜராகாமல் செந்தில் பாலாஜி 'டிமிக்கி'
- நமது நிருபர் -
தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி, முதல்வர் விஜய் ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசியது தொடர்பான வழக்கில், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகுமாறு, தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 'சம்மன்' அளித்திருந்த நிலையில், அவர் 'டிமிக்கி' கொடுத்தார். அவருக்கு எதிராக, 'லுக்அவுட் நோட்டீஸ்' கொடுத்துள்ள நிலையிலும், அவர் காவல் நிலையம் வரவில்லை.
அந்த புகாரில் கூறியுள்ளதாவது: சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், என்னை மொபைல் போனில் பல முறை தொடர்பு கொண்டார். அப்போது, 'நான் யூ டியூப் சேனல் நடத்தி வருகிறேன்; அதேபோல, கருத்து கணிப்பு நிறுவனத்தையும் நடத்துகிறேன்.
'ஒரு முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் சொன்னதன் அடிப்படையில், உங்களை நான் தொடர்பு கொள்கிறேன். உங்களை நேரடியாக சந்தித்து, முக்கியமான விஷயம் பற்றி பேச வேண்டும்' என்றார்.
நீடிக்காது
அதற்கு நான், 'தற்போது பிஸியாக இருப்பதால், எதுவாக இருந்தாலும் மொபைல் போனிலேயே சொல்லுங்கள்' என்றேன். அந்த நபர், 'த.வெ.க., ஆட்சி ஆறு மாதம் கூட நீடிக்காது. சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
'அப்போது, உங்கள் கட்சியின் கொறடா உத்தரவுக்கு மாறாக, நீங்கள் அவருக்கு எதிராக ஓட்டளிக்க வேண்டும். இதற்காக உங்களுக்கு ஒரே தவணையில், 35 கோடி ரூபாய் தருகிறோம்' என்று கூறினார்.
அதற்கு நான் உடன்படவில்லை. அதனால், 'நான் உங்களிடம் பேசியதை வெளியில் சொன்னால், நீயும், உன் குடும்பத்தினரும் உயிரோடு இருக்க மாட்டீர்கள்' என மிரட்டினார். திருநாவுக்கரசு மற்றும் அவரின் பின்னணியில் இருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.
இது குறித்து, சென்னை திருவல்லிக்கேணி போலீசார், நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, திருநாவுக்கரசு உட்பட ஒன்பது பேரை கைது செய்துள்ளனர்.
ரூ.180 கோடி
தொடர் விசாரணையில், த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி, விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க, 180 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டது தெரிய வந்தது. இதன் சூத்திரதாரிகளாக, தி.மு.க., முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, இவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது . மேலும், இவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க, நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களுக்கு, 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கி, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பூர்வீக வீடு
இதற்கிடையே தனிப்படை போலீசார், கரூர் அருகே உள்ள ராமேஸ் வரப்பட்டிக்கு சென்றனர். அங்கு, பூர்வீக வீட்டில் வசித்து வரும் செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோரின் பெற்றோர் வேலுசாமி - பழனியம்மாள் ஆகியோரிடம் வழக்கு விபரங்களை தெரிவித்து, செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோர், 6ம் தேதி காலை 10:30 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' அளித்தனர்.
இந்த சம்மனை ஏற்று, செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராவர் என, போலீஸ் அதிகாரிகள் நேற்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், இருவரும் 'டிமிக்கி' கொடுத்து விட்டனர்.
கைது உத்தரவு
இருவருக்கும் இன்னும் இரண்டு முறை சம்மன் அனுப்பப்படும்; அப்படியும் அவர்கள் ஆஜராகவில்லை என்றால், நீதிமன்றத்தில் கைது உத்தரவு பெறப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, மதுரையில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு ஓட்டுநர் கிருஷ்ணா என்பவரிடம் இருந்து, 37 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இப்பணம் அவருக்கு எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
இந்நிலையில், த.வெ.க., - எம்.எல்.ஏ.,விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கைதான எட்டு பேரில், திருநாவுக்கரசு, தியாகராஜன், ரமேஷ், நரேஷ், கார்த்திக் ஆகியோர் ஜாமின் கேட்டு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
@block_B@
த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசியது தொடர்பான வழக்கில் முன்ஜாமின் கேட்டு, தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு, நீதிபதி சி.குமரப்பன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜி.பழனிவேல் ஆஜராகி, ''பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும். இந்த வழக்கில் எம்.எல்.ஏ.,வும் சம்பந்தப்பட்டு இருப்பதால், மனுவை எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் பட்டியலிட வேண்டும்,'' என்றார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ''கூடுதல் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்; அதுவரை, மனுதாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது,'' என்றார். அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, மனுவை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதனால், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும்.block_B
@block_G@
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை (ஜூலை 08) விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு திருவல்லிகேணி போலீசார் சம்மன் அளித்திருந்த நிலையில், நேரில் அவர் ஆஜராகவில்லை. தற்போது அவர் முன் ஜாமின் கோரி இருக்கிறார்.block_G
சென்ற ஆட்சியில் குற்றம் செய்து நீதி மனற்றதால் தேடப்பட்ட இந்த இரு நபர்களுக்கு சென்ற ஆட்சியில் ராஜ வரவேற்பு செல்வாக்கு எல்லாமே அதிலே ஒருவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது இதிலிருந்து மக்களே தெரிந்து கொள்ளுங்கள் சென்ற ஆட்சி இவர்களுக்கு முழுதும் துணை போயிற்று என்று இப்போது திரும்பவும் அவர்களே திரும்பவும் வெளியிலிருந்து முதல்வர் விஜய் ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்க ஆயத்தப்படுத்தினர் ஆனால் வீழ்ச்சியைத்தான் கண்டார்கள் அவர்கள் இருவருமே இப்போது ஓடுகாலியாகிவிட்டார்கள் சென்ற ஆட்சியின் அலங்கோலத்தை இவர்கள் இருவருவருமே முன்னின்று செயற்படுத்த திரும்பவும் துவங்கினார்கள் இப்போது நீதிமன்றத்த்தின் பிடியியில் உளார்கள் நீதிமன்றம் இனி இவர்கள் பார்த்துக்கொள்ளும்
அடிச்சி கேப்பாங்க..... அப்போதும் சொல்லி விடாதீர்கள்... செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்.... இருவருக்கும் தலைமறைவு விஷயத்தில்.... இது தான் முதல் குடும்ப உறுப்பினர்கள் மைண்ட் வாய்ஸ்.
சீக்கிரம் புடிங்கசார் - புடிச்சு, பதினொருமணிக்கு ஆட்சி அமைப்போம் - பதினொன்னு அஞ்சுக்கு மணல் அள்ளலாம் என்று சொன்ன வாயிலேயே போடுங்க போலீஸ் அவர்களே
எய்தவன் எங்கேயோ இருக்க அம்பை மாத்திரம் நோண்டுகிறார்கள்.
கழுதை கெட்டா குட்டிசுவரு . திமுக காரன் கெட்டா அறிவில்லாத ஆலயம் .
அப்போ நெஞ்சில் வலி வந்தது. இப்போ எங்க வருமோ ?
அவரு உச்சத்துக்கே டிமிக்கி, அல்வா எல்லாம் கொடுத்தவருங்கோ ....
எல்லாம் ஆஸ்பிடலிலும் தேடி பாருங்கள்
திருடர்கள் கொள்ளைக்காரர்கள் தப்புவது இந்த நாட்டில் ரொம்பவும் சுலபம் கொள்ளையடித்த பணத்தில் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு கோடிகளை விட்டெறிந்து அடைக்கலம் புகுந்து தற்காலிகமாக தப்பிக்கலாம் எவ்வளவு நாளைக்கு தலை மறைவாக இருக்க முடியும். திருடர்களுக்கு நெற்றியில் போட்டு எதற்கு.
எப்படியும் மாட்டுவார் ஆண்டவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
அதென்ன டிமிக்கி கும்கின்னு! அன்னிக்கி 41 பேர் இரந்த போது 3 மாசம் வீட்ட விட்டு வெளியவே வர்ல.அதெல்லாம் டிமிக்கி இல்லையா?ஓடவும் இல்லே ஒழியவும் இல்லே இதெல்லாம் கொரில்லா போர் முறை.கைபோ பார்ட்டிக்கெல்லாம் இது புரியாது.புரிஞ்சவன் பிஸ்தா!