வான்வழி அமைப்பு மையத்தை ஓசூரில் அமைக்கிறது 'டிட்கோ'
சென்னை: டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து, கண்காணிப்பு விமானங்களுக்கான தொழில்நுட்பங்களை உருவாக்கும், வான்வழி அமைப்பு மையத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில், 'டிட்கோ' நிறுவனம் அமைக்க உள்ளது.
நம் நாட்டின் ராணுவத்திற்கான ஆயுதங்கள், ஏவுகணைகள், நவீன போர் சாதனங்கள் போன்றவற்றை டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி வருகிறது.
இதன் கீழ் செயல்படும் விமான மேம்பாட்டு முகமை, 16,000 கோடி ரூபாய் முதலீட்டில் நம் நாட்டிலேயே அதிநவீன போர் விமானங்களை தயாரிக்க, போர் விமான ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பட்ட விமான சோதனை மையத்தை அமைக்க, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற அதிகாரிகள் பேச்சு நடத்தி வந்தனர். இதற்காக ஓசூரில் நிலம் வழங்கவும் அரசு முன்வந்தது.
ஆனால், அந்த மையத்தை, ஆந்திராவில், புட்டபர்த்தியில் அமைக்கும் பணிகளை விமான மேம்பாட்டு முகமை தொடங்கிவிட்டது. தற்போது, வான்வழி அமைப்பு மையத்தை, டி.ஆர்.டி.ஓ., உடன் இணைந்து, ஓசூரில் அமைக்கும் முயற்சியில், 'டிட்கோ' நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
@block_B@ விரைவில் அறிவிப்பு இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “போர் விமான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மை யம் மற்றும் வான்வழி அமைப்பு மையம் ஆகியவற்றை தமிழகத்தில் அமைக்க, டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்பட்டது. ஆனால், விமான வடிவமைப்பு மையம் ஆந்திராவுக்கு சென்று விட்டதால், வான்வழி அ மைப்பு மையத்தை, தமிழகத்தில் அமைக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது” என்றார்.block_B
மேலும்
-
தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; இன்றும் சவரனுக்கு ரூ.560 குறைவு
-
அமர்நாத் யாத்திரையில் புதிய சாதனை; 5 நாட்களில் 1.13 லட்சம் பக்தர்கள் தரிசனம்
-
சீனாவில் கொட்டி தீர்க்கும் கனமழை; 20 பேர் பலி; பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்
-
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு; பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 24 பேர் கைது
-
கோல்டி பிரார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.41 லட்சம் சன்மானம்; எப்பிஐ அறிவிப்பு
-
ரஷ்யா- உக்ரைன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை