அமர்நாத் யாத்திரையில் புதிய சாதனை; 5 நாட்களில் 1.13 லட்சம் பக்தர்கள் தரிசனம்
நமது நிருபர்
ஜம்மு காஷ்மீரில் 5 நாட்களில் அமர்நாத் யாத்திரைக்கு 1.13 லட்சம் பக்தர்கள் வருகை தந்து சாதனை படைத்தனர்.
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில், கடல் மட்டத்தில் இருந்து, 12,730 அடி உயரத்தில் சிவபெருமானின் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை, கடந்த 3ல் தொடங்கியது. அடுத்த மாதம், 28 வரை யாத்திரை நடக்க உள்ளது. கடந்த 5 நாட்களில் அமர்நாத் யாத்திரைக்கு 1.13 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கூறியதாவது:
புனித யாத்திரையை அனைவருக்கும் உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவமாக மாற்றுவதும், அவர்களுக்குச் சாத்தியமான சிறந்த வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதும் எங்கள் இலக்காகும்.
இதுவரை, 1.13 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித குகையில் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் அனைவரும் தடையற்ற தரிசனம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Virumaandi Sir, your comments are wonderful, this lesson is extremely necessary for many Indians, unfortunately this message won't reach whom it should, also to all those who are just spamming hate against him in the comments, cry harder
funny guy skywalker
skywalker do not know virumaandi filthy anti India comments in other headings..
வெறுமாண்டியோட குணம் தெரியாமல் வக்காலத்து வாங்காதீர்கள் வானத்தில் நடப்பவரே!
வீட்டில் மறைந்த தாய் தந்தையரை போட்டோ வைத்து அல்லது சிலை வைத்து அந்த இடத்திற்கு நடந்துசெய்து நமஸ்கரிக்கிறோம். வீட்டில் நடை ஒரு யாத்திரைதான். கொள்ளுப்பேரன் பேத்தி அப்பா அம்மா தாத்தா பாட்டி இவர்களை பிறப்பித்தவன் பகவான். அவன் ஒருவன் எதோ ஒரு இடத்தில் சிலையாய் இருக்கிறான். ஆயிரக்கணக்கான தூரம் சென்று அவனை வணங்குகிறோம். இதுவும் யாத்திரைதான். விளையாட்டில் எளிதில் வெற்றி அடைகிறோம் இது வீட்டு யாத்திரை. கடினப்பட்டு வெற்றி அடைகிறோம் இது வெகு தூரம் சென்ற யாத்திரை.
benaras எனும் காசியில் மோடி ஆட்சியில் தான் மிக சுத்தமாக மாறியது...காசியை சுற்றி அணைத்து வீடுகளும் காவி வர்ணம் பூசி அழகு படுத்தப்பட்டது. இது சில ஜென்மங்களுக்கு புரியாது
என்னடா இது. சாத்தான் வேதம் ஒதுது
இயற்கைதான் பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் கடவுள் என்பதை உணராமல், கற்களையும் பனிலிங்கத்தையும் மட்டும் தேடி ஓடி, சுற்றியுள்ள இயற்கையை அழிக்கும் இந்த அறியாமை மாறாதவரை, சுற்றுச்சூழல் பேரழிவுகள் இன்னும் தீவிரமாகவே செய்யும். நேரில் சென்று உணர்ந்தவர்களின் குரல்கள் இன்னும் சத்தமாக ஒலிக்க வேண்டும். ஆனால் மதத்தை வைத்து அரசியல் நடத்தும் அரசு அதை ஒடுக்கத்தான் முன்வரும். அதுதான் இந்த நாட்டின் சாபம்.
உன்னைப் போன்றவர்கள் இந்த நாட்டின் மிகப்பெரும் சாபம்.
பக்தி வேறு, பொறுப்பு வேறு என்ற எண்ணம்: "இறைவனைத் தரிசிப்பது மட்டுமே என் கடமை, இந்த இடத்தை சுத்தமாக வைத்திருப்பது அரசின் கடமை" என்று சராசரி இந்தியப் பக்தன் நினைப்பதுதான் முதல் கோணல். கங்கையையும், லித்தர் நதியையும் புனித நதி என்று கும்பிடும் அதே கைகளால், அதில் சோப்பு நீரையும் பிளாஸ்டிக்கையும் கலக்கும் முரண்பாடு நம்மிடம் மட்டுமே உள்ளது.
சுற்றுச்சூழல் சுமந்து கொள்ளும் திறனைக் Ecological Carrying Capacity கணக்கிட்டு அரசு பக்தர்களின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு Cap on pilgrims விதித்தால், அதை "ஆன்மீகத்திற்கு எதிரான திராவிட அரசு" என்று அரசியல் ஆக்கும் போக்கு இங்கு உடனே தொடங்கிவிடுகிறது.சதுரகிரி உதாரணம்.
ஏலேய் விருமாண்டி கடவுளை எப்படி கும்பிட வேண்டும் என்று நீ எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை.
பக்தி வேறு, பொறுப்பு வேறு என்ற எண்ணம்: "இறைவனைத் தரிசிப்பது மட்டுமே என் கடமை, இந்த இடத்தை சுத்தமாக வைத்திருப்பது அரசின் கடமை" என்று சராசரி இந்தியப் பக்தன் நினைப்பதுதான் முதல் கோணல். கங்கையையும், லித்தர் நதியையும் புனித நதி என்று கும்பிடும் அதே கைகளால், அதில் சோப்பு நீரையும் பிளாஸ்டிக்கையும் கலக்கும் முரண்பாடு நம்மிடம் மட்டுமே உள்ளது.
சுற்றுச்சூழல் சுமந்து கொள்ளும் திறனைக் Ecological Carrying Capacity கணக்கிட்டு அரசு பக்தர்களின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு Cap on pilgrims விதித்தால், அதை "ஆன்மீகத்திற்கு எதிரான திராவிட அரசு" என்று அரசியல் ஆக்கும் போக்கு இங்கு உடனே தொடங்கிவிடுகிறது.சதுரகிரி உதாரணம்.
ஆன்மீக யாத்திரைகள் இன்று சுற்றுலாவாக Tourism மாற்றப்பட்டுவிட்டன. எவ்வளவு தூரம் கூட்டம் வருகிறதோ, அவ்வளவு தூரம் உள்ளூர் பொருளாதாரம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் பெருகும் என்பதால், அரசோ அல்லது தனியார் அமைப்புகளோ கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் தயங்குகின்றன. நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கிறோம்.
ஆன்மீகக் கடமைகளுக்கு அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தை, அதே அளவில் "சுற்றுச்சூழல் சுமந்து கொள்ளும் திறன்" Ecological Carrying Capacity மீதும் காட்ட வேண்டும். லட்சக்கணக்கான பக்தர்களை அனுமதிப்பதை குறத்து, தினசரி இவ்வளவு பேர் தான் செல்ல வேண்டும் என்ற கடுமையான உச்சவரம்பை Cap on daily pilgrims அமல்படுத்துவது மட்டுமே காஷ்மீரின் இந்த உன்னதமான இயற்கைச் சூழலையும், நதிகளையும் எதிர்காலத்திற்குப் பாதுகாக்கும் ஒரே வழியாகும்.
பயோ கழிவறைகள் பயன்பாடு செய்யமுடியாத அளவுக்கு மோசமான நிரம்பி வழிய, அவைகளை காஷ்மீர் பள்ளத்தாக்கின் முக்கியக் குடிநீர் ஆதாரங்களான லித்தர் நதி மற்றும் சிந்து நதி மூலத்தில் டன் கணக்கில் கொட்டப்படிகின்றன. திடகழிவுகள் பிளாஸ்டிக் பாட்டில், உறைகள், காகிதம், உணவு கழிவு இவைகள் வழிநெடுகிலும் பள்ளத்தாக்கில் வீசப்பட்டும், மற்றவை டன்கணக்கில் எரிக்கப்பட்டும் அந்த சூழலே ஒரு மோசமான நிலையில் உள்ளது.
லங்கர்களில் சாப்பாடு சமைக்க, சமைத்து பாத்திரங்களை கழுவ அதே நதி நீர் தான் கீழ்மட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது. பாத்திரங்களை சோப்பு போட்டு கழுவி, அதே நீர் ஆதாரத்தில் விடப்படுகிறது.
நீரில் கோலிஃபார்ம் Coliform அளவு நோய் ஏற்படும் அளவிற்கு பல இடங்களில் உள்ளது என்று கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனிதர்கள் காற்றில் வெளியிடும் உடல் வெப்பம், சமைப்பதற்காக லங்கர்களில் எரிக்கப்படும் கேஸ்/விறகுகள், மற்றும் வாகனப் போக்குவரத்து காரணமாக அந்தப் பகுதியின் உள்ளூர் வெப்பநிலை Local Temperature உயர்கிறது. இதனால் அமர்நாத் குகையைச் சுற்றியுள்ள பனிப்பாறைகள் வழக்கத்தை விட வேகமாக உருகுகின்றன. இதுவே சில நேரங்களில் திடீர் வெள்ளப் பெருக்குக்கு Cloudbursts/Flash floods வழிவகுக்கிறது.
இந்தியாவில் இதுவரை எதைத் தான் ஒழுங்காக இயற்கை சூழலில் விட்டு வைத்து உள்ளோம்? பக்கத்துலே நம்ம மருதமலை தொடங்கி, திருவண்ணாமலை கிரிவலம், அல்லது சதுரகிரியாகட்டும் அல்லது ஏழுமலையானுஇன் திருமலை பாதை ஆகட்டும் , இல்லை கொஞ்சம் கடினமான வெள்ளியங்கிரி ஆகட்டும், இல்லை வடக்கே சார் தாம்கேதார் பத்ரி ஆகட்டும் - எல்லாவற்றையும் நேரில் கால்நடையாக பயணித்து ஒருமுறைக்கும் மேல் சென்ற நேரடி அனுபவத்தில் மனம் நொந்து சொல்கிறேன்.
குடிமைப் பண்பு Civic Sense / Civic Virtue
குடிமை உணர்வு Civic Consciousness,
பொது ஒழுக்கம் Public discipline,
சமூகப் பொறுப்பு Social responsibility எதுவுமே இல்லாத கூட்டம் தான் நாம்.
ஆமா விருமாண்டி நீ பத்ரிக்கு கால்நடையா போறப்போ நானும் பார்த்தேன். போவியா அங்கிட்டு புத்திமதிப் ... சொல்ல வந்துட்ட. ஆனா ஒரு மனுஷன் இப்படி ஏக்கர் கணக்கில் பொய் சொல்லக்கூடாது.