ரஷ்யா- உக்ரைன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை


நமது நிருபர்




புடினும், ஜெலன்ஸ்கியும் இதை இப்போதே தீர்க்க விரும்புகிறார்கள் என ரஷ்யா- உக்ரைன் அமைதி ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அங்காராவில் நடந்த உச்சி மாநாட்டில் அதிபர் டிரம்ப் பேசியதாவது:புடின், ஜெலன்ஸ்கி ஆகிய இருவரும் ஒரு உடன்பாடு காண விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இவ்வளவு காலம் ஆனது வருத்தம் அளிக்கிறது. அவர்கள் இருவருமே இதை இப்போதே தீர்த்து வைக்க விரும்புகிறார்கள்.

நாம் இதை தீர்த்து விடுவோம் என்று நான் நினைக்கிறேன். விரைவில் நடக்கும் என நம்புகிறேன். அவர்கள் மக்களை கொல்வதை நான் விரும்பவில்லை. அது எங்களை பாதிப்பதில்லை.

அது ஐரோப்பாவைத் தான் மிக அதிகமாக பாதிக்கிறது. நாங்கள் ஐரோப்பாவிற்கு உதவ விரும்புகிறோம். நான் இதுபோன்று எதையும் பார்த்ததில்லை. இது ஒரு படுகொலை, இது நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.

Advertisement