தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; இன்றும் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 சரிவு
சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 08) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 06) ஆபரண தங்கம், கிராம் 13,560 ரூபாய்க்கும், சவரன், 1,08,480 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (ஜூலை 07) தங்கம் விலை, கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து, 13,400 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,280 ரூபாய் சரிவடைந்து, 1,07,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று காலை (ஜூலை 08) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 640 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து 13,330 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று மாலையும் மீண்டும் தங்கம் விலை சரிந்தது. காலையில் சவரனுக்கு 560 ரூபாய் சரிந்த தங்கம், மாலை சவரனுக்கு 1040 ரூபாய் சரிந்தது. அதாவது, இன்று ஒரே நாளில் 1600 ரூபாய் சரிந்தது. சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி நிலவரம்
வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 245 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இப்படி குறைந்து கொண்டே போனால், நகையை வைத்து கடன் வாங்கியவர்கள் கதி? அதோ கதிதான்!
விலை ஏறும் போது கிராமுக்கு ஆயிரம் ரூபாய் ஏறுகிறது. இறங்கும் போது சவரனுக்கு ஆயிரம் ரூபாய் இறங்குகிறது. செய்கூலி சேதாரம் என்று நடுவில் மக்களை சுரண்டுபவர்கள் தான் அதிகம்.