நீலகிரியில் பரவலாக மழை; 2 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி: மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் ஆகிய 2 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நீலகிரியில் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக இன்று அதிகாலை முதல் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுப்பகுதிகளில் இடைவிடாது பெய்து வருகிறது. மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி வருகிறது.
மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் ஆகிய 2 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விபரம் மில்லி மீட்டரில்...
* சேரங்கோடு- 86
* செருமுள்ளி 83
* ஓவேலி 83
* பாடந்துறை 80
* தேவாலா 76
* அவலாஞ்சி 71
* அப்பர் கூடலூர் 68
* கூடலூர் 66
* பந்தலூர் 63
* போர்த்திமுந்து 44
* அப்பர் பவானி 36
* எமரால்டு 14
* பார்சன் வேலி 12
* நடுவட்டம் 11
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement