ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி – வால்பாறை ரோட்டில், மரம் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொள்ளாச்சி – வால்பாறை ரோட்டில் சமத்துார் அருகே குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக குழி தோண்டப்பட்டுள்ள சூழலில், அங்கு இருந்த மரம் பலமிழந்தது.

நேற்று பலத்த காற்று வீசியதற்கு மரம் ரோட்டில் சரிந்தது. அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகினர். மரம் முறையாக அகற்றிய பின், போக்குவரத்து சீரானது.  இதுபோன்று பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் முன்பாக உயர் அழுத்த மின்கம்பி சாலையில் அறுந்து தொங்கியது. தகவல் அறிந்து அதிகாரிகள் அதை சீரமைத்தனர்.

Advertisement