தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் வண்டு

கோவை: வ.உ.சி.மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடக்கிறது. வளாகத்தை சுத்தப்படுத்தும் தூய்மை பணியாளர்களுக்கு, வழங்கப்பட்ட உணவில் வண்டு இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

சமீபத்தில்தான் தூய்மை பணியாளருக்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்தது. ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த பிறகும் நிலைமை மாறவில்லை. சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை, மாநகராட்சி உறுதிப்படுத்த வேண்டும்,'' என்றார் தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு சங்கம் பொது செயலர் செல்வம்.

மாநகராட்சி நகர்நல அலுவலர் சுபாஷ் காந்தியிடம் கேட்டபோது, பொருட்காட்சி வளாகம் சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு, மாநகராட்சி உணவு வழங்குவதில்லை, என்றார்.



Advertisement