ஒன்று ஒப்பந்தம் எட்டப்படும் அல்லது கதையை முடித்து விடுவேன்; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், 'ஒன்று ஒப்பந்தம் எட்டப்படும், அல்லது கதையை முடித்துவிடுவேன்' என ஈரானை எச்சரித்தார்.
பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்க-ஈரான் போர் தொடங்கியபோது கொல்லப்பட்ட தனது உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கான பல நாள் இறுதிச் சடங்குகளில் ஈரான் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது:
நாம் எப்படியாவது வெற்றி பெறப் போகிறோம். ஒன்று ஒப்பந்தம் எட்டப்படும், அல்லது கதையை முடித்துவிடுவேன். அந்த வேலையை முடிப்பது கடினமாக இருக்காது. நான் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வதையே விரும்புகிறேன், ஏனென்றால் நான் மக்களைப் பாதிக்கக்கூடிய செயலை செய்ய விரும்பவில்லை. நம்மால் ஒரே மணி நேரத்தில் அவர்களுடைய பாலங்களை இடித்துத் தள்ள முடியும்.
நாம் போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட, கச்சா எண்ணெய் விலை இப்போது அதிகமாக குறைந்து இருப்பதாக நான் நினைக்கிறேன். எங்களுக்குச் சலுகைகள் கிடைத்துள்ளன, அவர்கள் அந்தச் சலுகைகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், ஆனால் அணு ஆயுதம் இருக்காது. ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் நாடவில்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
வாசகர் கருத்து (1)
sankar - Nellai,இந்தியா
07 ஜூலை,2026 - 16:41 Report Abuse
சரியான வெத்துவேட்டு 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement