அரசு பள்ளியில் படித்த பெண் இந்த இடத்தில் நிற்கிறேன்; அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்
சென்னை: அரசு பள்ளியில் படித்த பெண் இந்த இடத்தில் நிற்கிறேன் என பள்ளி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவு: இன்று சிலர், அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார் என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள். உண்மை என்ன தெரியுமா? நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல. என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்.
நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை. கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை.
இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்?
ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம்.
என்னை விமர்சியுங்கள். என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள். மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள்.
இன்னொரு கேள்வி.இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்? அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது.ஆனால் அந்த அரசு பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில். இவ்வாறு அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.
அரசு பள்ளியில் படித்து, மிக உயர் பதவியில் எத்தனையோ மேதைகள் இருக்கிறார்கள். ரீல் விடக்கூடாது திறமையை நிரூபிக்க வேண்டும். ஆங்கில புலமை ஒரு அளவொகோல் இல்லை, மக்களுக்கு பணி செய்ய.
Well said.
நியாயமான பேச்சு .........
எதிர்க்கட்சிகளையும் பொதுமக்களையும் விமர்சிப்பதற்குப் பதிலாக, அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் தெளிவான பதில்களை வழங்குவது அவசியம். உங்கள் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் மூலம் அவற்றை நிரூபிக்க வேண்டும் . திறமையும் அறிவும் கொண்ட பலர் வாய்ப்புகள் இல்லாமல் சமூகத்தில் கீழ் நிலையில் உள்ளனர். எனவே, இதற்கு முன் யாராலும் செய்ய முடியாத ஒரு மாற்றத்தையும் சாதனையையும் மக்களுக்கு இந்த அறிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதை நிகழ்த்தி காட்டி மக்களீடம் நல்ல பெயர் வாங்கலாமே. உங்களை பற்றி கூறும்போது ஒரு சமுதாயத்தை கூறியதை போல எடுக்க வேண்டியதில்லையே. முன் ஒருவர் கூறியதை போலே விஜய் என்ற பிரபலமான ஒருவருக்கு மக்கள் ஒரு சந்தர்ப்பத்தை குடுத்து இருகிறார்கள். தொகுதியில் யார் நின்டார்கள் என்று 90% யாரும் பார்க்கவில்லை.
1969 1970 களில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில மீடியம் ஒரே ஒரு செக்ஷன் மட்டுமே. மீதி 9 அல்லது10 செச்டின் தமிழ் மீடியம். காலம் போக போக தமிழ் மீடியம் பிரிவுகள் குறைந்து கொண்டு வந்தது. இப்போது சுத்தமாக அரசு பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகளில் தமிழ் மீடியம் இல்லை என்றே கூறலாம். நான் 11 வது வரை தமிழ் மீடியத்தில் படித்தேன். பிறகு puc இல் இருந்து ஆங்கில கல்வி. உண்மையை கூறினால் டிகிரி முடித்த பின்னரும் ஆங்கிலத்தில் பேச தெரியாது. பிறகு கஷ்டப்பட்டு பேச கற்றுக்கொண்டேன். இதுதான் இன்றைய நிலைமை
வாழ்த்துக்கள் மேடம். உங்கள் நல்ல நோக்கங்கள் நிறைவேற மீண்டும் வாழ்த்துக்கள்.
தமிழன் தமிழை பிழையாக படித்தால்தான் கேலி செய்யலாம் அதற்காக அவன் வெட்கப்படவேண்டும், ஆங்கில உச்சரிப்பு பிழை ஒரு அவமானமே அல்ல
அரசு பள்ளிகளில் படித்த நிறைய அரசியல் வாதிகள் லஞ்சம் வாங்குவதில் கில்லாடிகள்
அரசு பள்ளி மாணவியின் சாதனை
தமிழ் நாட்டில் தமிழில் பேச தெரியவில்லை என்றல் தான் வெட்ட்கப்படவேண்டும் .. ஆங்கிலம் நமது மொழி அல்ல.
அநேகமான வளர்ந்த நாடுகளில், அவர்களது மொழியில் தான் அரசியல் ..