நெருக்கடி நேரத்தில் மக்களுக்கு அரசு துணை நின்றது: பிரதமர் மோடி
ஜகார்த்தா: ''தங்களது வாழ்வில் நெருக்கடிகளை மக்கள் சந்தித்த போது அவர்களுக்கு அரசு துணை நின்றது'', என இந்தோனேஷியாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.








வார்த்தை இல்லை
இந்தோனேஷியாவிற்காக மட்டுமல்லாமல், ஆசியான் அமைப்புக்கும் ஒரு சக்தியாக இந்தியாவின் தற்சாற்பு திகழும். இந்தோனேஷியா அதிபர் இந்தியாவின் உண்மையான நண்பர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு வாழ்த்துகள். இந்தோனேஷியா மக்கள் அளித்த அன்பிற்கும், வரவேற்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதனை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இந்தியா மீதான அன்பு, மரியாதையை உங்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் பார்க்கிறேன்.
இன்று காலை இந்தோனேஷியாவின் உயர்ந்த விருது கிடைத்தது எனக்கு கவுரவமாக உள்ளது. இது 140 கோடி இந்தியர்களுக்கு கிடைத்த பெருமை. இந்தியா மற்றும் இந்தோனேஷியா இடையிலான நட்பிற்கு அடையாளமாக உள்ளது.
டிஎன்ஏ
இந்தியாவின் டிஎன்ஏவை கொண்டு உள்ளதாக அதிபர் தெரிவித்தார். இதற்கு பலத்த கரகோஷம் கிடைத்தது. இந்த வார்த்தையால் லட்சக்கணக்கான இந்தியர்களின மனதை வென்றுள்ளீர்கள். அந்த ஒரு வார்த்தை இந்திய மக்களின் மனதை தொட்டுள்ளது. இந்த டிஎன்ஏ பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. இது பகிரப்பட்ட பாம்பரியத்தை டிஎன்ஏ கட்டமைத்துள்ளது.
இந்தியாவும், இந்தோனேஷியாவும் மனதளவில் மட்டுமல்ல, புவியியல் ரீதியாகவும் நெருங்கிய அண்டை நாடுகள். இந்தியாவின் நிக்கோபார் தீவுக்கும், இந்தோனேஷியாவின் ஆச்சேவுக்கும் இடையிலான தூரம் 150 கிலோ மீட்டர் மட்டுமே. இந்தியாவின் பல மாநிலங்களை விட, இந்தோனேஷியாவின்ஒரு பகுதி இந்தியத் தீவுக்கு மிக அருகில் உள்ளது.
உறுதி
இந்தியாவில் பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா எனற திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.20 பிரிமியத் தொகையில், ரூ.2 லட்சம் வரையிலான விபத்து காப்பீடு கிடைக்கிறது. இதனால், இந்தியாவில் 60 கோடி பேர் பயன் அடைகின்றனர். பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் ஒரு நாளைக்கு சுமார் ரூ.1.50 பிரீமியத்திற்கு ஆயுள் காப்பீடை வழங்குகிறது. இந்தியாவில் 28 கோடி பேர் இந்தத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டு திட்டங்களின் கீழ், இதுவரை மக்களுக்கு சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தங்களது வாழ்வில் நெருக்கடிகளை மக்கள் சந்தித்த போது அவர்களுக்கு அரசு துணை நின்றது. தற்போது நேரடி பணப்பரிமாற்றத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவித முறைகேடும் இ ன்றி முழுத் தொகையும் பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்யும் அமைப்பு ஆகும்.
பெரிய நாடு
கடந்த 4 ம் தேதி இந்தியாவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது. இந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட பொருளின் அளவு வியப்பு அளிக்க வைக்கும். அதில் பயன்படுத்தப்பட்ட ஸ்டீலை பயன்படுத்தி 40 ஈபிள் டவர் அல்லது ஐந்து புர்ஜ் கலீபா அமைக்கப்படும். அங்கு பயன்படுத்தப்பட்ட கேபிள் மூலம் உலகத்தை இரண்டு சுற்று சுற்றி கட்டி வைக்கலாம். இதுபோன்ற முயற்சிகளின் காரணமாக, சுத்திகரிப்பு திறனில் இந்தியா தற்போது உலகளவில் முதல் நான்கு நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
போலி இந்துப் பெயரில் உள்ள துலுக்கனே பண மதிப்பிழப்பால் உன் டொப்பிள்கொடி நாடான பாகிஸ்தான்தானுக்குத்தான் நெருக்கடி ஏற்பட்டது. ஏனென்றால் ₹ 2000 இந்திய ரூபாயை டன் கணக்கில் அச்சடித்து புழக்கத்தில் விட்டு இந்திய பொருளாதாரத்தை நிலைகுலைய வைக்க இருந்த நேரத்தில் பிரதமர் மோடி பண மதிப்பிழப்பை செய்து பாகிஸ்தானை நிலைகுலைய வைத்தார். அதுவரை செழிப்புடன் வலம் வந்த பாகிஸ்தானின் பொருளாதாரம் பண மதிப்பிழப்பிற்கு பின் அதலபாதாளத்திற்கு போய் அந்தநாடு திவாலாகி விட்டது. அதிலிருந்து அந்த நாடு மீண்டுவர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மேலும் நீ கூறியது போல் கோவிட் நெருக்கடியின் போது கொரோனா ஊசியை உலகத்திற்கே இலவசமாக கொடுத்தது இந்தியா. அப்படியிருக்கும் போது தடுப்பூசி மருந்து செலவை இந்தியர்கள் தலையில் கட்ட எப்படி திட்டம் போடும்? நீ சொல்வதை எல்லாம் உண்மை என்று நம்புவதற்கு எங்களை எல்லாம் உன்னைப் போன்ற தற்குறி என்று நினைத்து விட்டாயா?
ஆமாமாம் பார்க்கிறோமே. பணமதிப்பிழப்புன்னு நெருக்கடியை ஏற்படுத்தியது ,கோவிட் நெருக்கடியின் போது தடுப்பு மருந்துக்கு பணம், தடுப்பு ஊசி போட்டுக் கொள்பவர்கள் தலையில் கட்ட திட்டம் போட்டது.
விருமாண்டி, பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்ல பழகிக்க அடிச்சிவிடாத
குருமாண்டி முட்டுச்சந்துல வந்து வசமா மாட்டிக்கிட்ட வாசகர்களிடம் வசவு வாங்கு முன் தப்பிச்சு ஓடிரு ஹ்ஹஹாமேலும்
-
தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; இன்றும் சவரனுக்கு ரூ.560 குறைவு
-
அமர்நாத் யாத்திரையில் புதிய சாதனை; 5 நாட்களில் 1.13 லட்சம் பக்தர்கள் தரிசனம்
-
சீனாவில் கொட்டி தீர்க்கும் கனமழை; 20 பேர் பலி; பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்
-
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு; பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 24 பேர் கைது
-
கோல்டி பிரார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.41 லட்சம் சன்மானம்; எப்பிஐ அறிவிப்பு
-
ரஷ்யா- உக்ரைன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை