பங்கு சந்தைகள் 2சதவிகிதம் வீழ்ச்சி முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி இழப்பு

அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்ததால், கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்தது. இதையடுத்து முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் நேற்று 2 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன. நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,677 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 76,503 புள்ளிகளிலும், நிப்டி 517 புள்ளிகள் சரிந்து 23,882 புள்ளிகளிலும் முடிந்தன.

சரிவுக்கான முக்கிய காரணங்கள்

1 அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானுடனான இடைக்கால ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக தெரிவித்தது

2 ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட தாக்குதலால் மேற்கு ஆசிய பதற்றம் அதிகரித்தது

3 கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்ததால் பணவீக்கம் மற்றும் உலகளாவிய எரிசக்தி வினியோகம் குறித்த அச்சம் உருவானது

4 முதல் காலாண்டு நிறுவன முடிவுகள் பலவீனமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக நடந்து கொண்டது

5 உலகளாவிய பங்குச்சந்தைகளில் நிலவிய எதிர்மறை போக்கும் இந்திய சந்தையை பாதித்தது.

@block_B@ பங்குகள் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பங்குச்சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி., பி.பி.சி.எல்., ஹெச்.பி.சி.எல்., ஆகியவற்றின் பங்குகள் கடும் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
block_B

Advertisement