வேளாண் பல்கலையில் சேர்ந்து படிக்க இன்று நடக்கிறது கலந்தாய்வு

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் அண்ணாமலைப் பல்கலை வேளாண் பிரிவு சார்பில், 2026 -27 கல்வியாண்டுகான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று துவங்குகிறது.

நடப்பு கல்வியாண்டில் பி.எஸ்சி., மாணவர் சேர்க்கைக்காக 17 பாடப்பிரிவுகளுக்கு ஜூன் 17ம் தேதி வரை 26 ஆயிரத்து 709 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 24 ஆயிரத்து, 435 விண்ணப்பங்கள் தகுதி பெற்றன.

இதில் பெண்கள் 15 ஆயிரத்து 757 பேர். அரசுக்கல்லுாரிகளில் 2,516, இணைப்பு கல்லுாரிகளில் அரசு இடஒதுக்கீடான 3,051 இடங்களும், அண்ணாமலைப் பல்கலையின் வேளாண் பிரிவில் 340 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. கலந்தாய்வு இன்று துவங்குகிறது. நான்கு கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. துணைத் தேர்வாளர்களுக்கான கலந்தாய்வு, முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு, அதன் அடிப்படையில் தேதி நிர்ணயிக்கப்படும். செப்.,9ம் தேதி கல்லுாரி திறக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, வேளாண் பல்கலை கல்வி பாடங்களுக்கான விவரங்களை 94886 35077, 94864 25076 ஆகிய எண்களிலும், ugadmissions@tnau.ac.in இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

அண்ணாமலைப் பல்கலை கல்வி பாடங்களுக்கான விவரங்களை, 98657 03537 மற்றும் agridean2015@gmail.com என்ற இ-மெயில் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.


@block_B@

கலந்தாய்வு தேதிகள்



பொதுப்பிரிவினர் மற்றும் 7.5 சதவீத அரசு இட ஒதுக்கீடு, இணையவழி கலந்தாய்வு - இன்று முதல் 15 ம் தேதி வரை.

டிப்ளமோ படிப்பிற்கான நேரடி கலந்தாய்வு - 14, 15 ம் தேதிகள்.

பி.எஸ்சி., பாடப்பிரிவுகளில் சிறப்பு நேரடி கலந்தாய்வு - 17ம் தேதி.block_B

Advertisement