நெய்வேலி ரவுடி குண்டாசில் கைது
நெய்வேலி: நெய்வேலி ரவுடியை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த வடக்கு மேலுாரைச் சேர்ந்தவர் வீரப்பன் மகன் சந்துரு, 23; இவரை, கொலை முயற்சி வழக்கில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரின் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாருக்கு, எஸ்.பி., விவேகானந்த சுக்லா பரிந்துரைத்தார். கலெக்டரின் உத்தரவையேற்று, கடலுார் மத்திய சிறையில் உள்ள சந்துருவை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement