ஐ.பி.ஓ.,: 'ஆல்பைன் டெக்ஸ்வேர்ல்டு' ரூ.126 கோடி திரட்ட திட்டம்
'ஆல்பைன் டெக்ஸ்வேர்ல்டு' ரூ.126 கோடி திரட்ட திட்டம்
ஜ வுளி உற்பத்தி துறையில் செயல்பட்டு வரும் 'ஆல்பைன் டெக்ஸ்வேர்ல்டு' நிறுவனம், புதிய பங்குகள் வெளியீடு வாயிலாக 126.25 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், இந்நிறுவனம் 1.20 கோடி புதிய பங்குகளை மட்டுமே வெளியிடுகிறது. திரட்டப்படும் நிதியானது, குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இந்நிறுவனம் அமைக்கவுள்ள மூன்றாவது உற்பத்தி ஆலைக்கு புதிய இயந்திரங்கள் வாங்க 32.08 கோடி ரூபாயும், நிறுவனத்தின் பழைய கடன்களை அடைக்க 52.20 கோடி ரூபாயும், மீதமுள்ள தொகை நிறுவனத்தின் இதர தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.ஓ., காலம் : ஜூலை 14 - ஜூலை 16, 2026
பங்கு விலை : ரூ.100 - ரூ.105
குறைந்தபட்ச முதலீடு : ரூ.14,910 (142 பங்குகள்)
பட்டியலிடப்படும் நாள் : ஜூலை 21, 2026
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement