'பின்' முறையில் இருந்து கைரேகைக்கு தாவும் மக்கள்
இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில், கைரேகை மற்றும் முக அடையாள தொழில்நுட்பங்கள் வாயிலாக பணத்தை அங்கீகரிக்கும் 'பயோமெட்ரிக்' முறையிலான யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் இந்தியர்களிடையே வேகமாக அதிகரித்து வருகின்றன.
'என்.பி.சி.ஐ.,' வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் இந்த 'ஒன்-டிவைஸ் பயோமெட்ரிக்' முறையில் 61.10 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த பண மதிப்பு 25,416 கோடி ரூபாய் ஆகும்.
இந்த புதிய பயோமெட்ரிக் தொழில்நுட்பம் வாயிலாக, வாடிக்கையாளர்கள் தங்களது யு.பி.ஐ., பின் நம்பரை டைப் செய்ய தேவையில்லை. அதற்கு பதிலாக மொபைல் போனில் கைரேகை அல்லது முக அடையாளத்தை வைத்தே நொடியில் பணத்தை அனுப்ப முடியும் (வங்கிகள் மற்றும் கூகுள்பே, போன்பே போன்ற செயலிகள் அனுமதிக்கும் பட்சத்தில்).
இந்த வசதி தனிநபர்களுக்கு இடையே பணம் அனுப்புவதற்கும், கடைகளில் கியூ.ஆர்., கோடு வாயிலாக வணிகர்களுக்கு பணம் செலுத்துவதற்கும் பொருந்தும்.