அப்போலோ குழந்தை நரம்பியல் நிபுணர் புதுச்சேரியில் ஆலோசனை வழங்கல் 

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவனையின் சிறப்பு நிபுணர் அனந்தநாராயணன், புதுச்சேரியில் நேற்று ஆலோசனை வழங்கினார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையின் குழந்தை நரம்பியல் சிறப்பு நிபுணர் அனந்தநாராயணன், புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடி, என்.டி.மகால் எதிரில், 100 அடி ரோடு, எண்: 60, இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், நேற்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்கினார்.

அதில், தலைவலி, மூளைத் தாக்கம், மயக்கம், துாக்கம் கலைதல், வலிப்பு, கிறுகிறுப்பு, தலைசுற்றல், நடப்பதில் தடுமாற்றம், பெருமூளை வாதம், பேச்சு தாமதம், மூளை காய்ச்சல், அறிவுசார் குறைபாடு, ஆட்டிசம், கவனக்குறைவு மிகை இயக்கக் கோளாறு தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கு தகுந்த சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்.

Advertisement