ஜீப் – லாரி மோதல் நண்பர்கள் 7 பேர் பலி
உத்தரகன்னடா:
கர்நாடகாவில் ஜீப் மற்றும் லாரி மோதிய விபத்தில், நண்பர்கள் ஏழு பேர் பலியாகினர்.
கர்நாடகாவின் தார்வாடை சேர்ந்த நண்பர்கள் ஒன்பது பேர், ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். தார்வாடில் இருந்து ஜீப்பில் புறப்பட்ட அவர்கள், உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலா வழியாக நேற்று சென்றனர். எல்லாபுரா தாலுகாவின் அரபைல்காட்டின் திருப்பத்தில் சென்ற போது, எதிரே வந்த லாரி நண்பர்கள் சென்ற கார்மீது மோதியது. சம்பவ இடத்திலேயே ஆறு பேர் பலியாகினர். மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர்கள் ஜீப்பில் பயணித்த பசவராஜ், 48, அபிஷேக் ஈஸ்வர், 28, அக்ஷய், 26, அபிஷேக், 26, ஜீப் ஓட்டுநர் சஞ்சீவ், 33, மஞ்சுநாத் சுலகி, 32, சச்சின் ஹெப்பள்ளி, 26, என, அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த சிவராஜ் துர்கப்பா மடிவாள், 22, சென்னபசய்யா பசலிங்கய்யா சம்பகாவ், 28, ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தில் இறந்த சச்சின் தவிர, மற்றவர்கள் தார்வாடில் உணவுப் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் ‘டெலிவரி பாய்ஸ்’ ஆக பணியாற்றியதும், பணி அழுத்தம் காரணமாக சுற்றுலா புறப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இறந்த சச்சின், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் பணியாற்றியதும், 20 நாட்கள் முன் சொந்த திரும்பி சுற்றுலா சென்றதும் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு; தனியார் பள்ளிகளில் கணிசமாக அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்
-
தொழில் தொடங்க விரைவாக ஒப்புதல் அளிக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
-
திரிணமுல் காங்கிரஸ் வங்கி கணக்குகளை கையாள சிறப்பு அதிகாரி நியமனம்; மம்தா அணிக்கு தற்காலிக நிம்மதி
-
கொச்சி - தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி
-
கடன் செயலி உருவாக்கி ரூ.200 கோடி மோசடி; மென்பொறியாளர் கைது
-
மின் கம்பி திருட்டால் ரயில் சேவை பாதிப்பு