தேசியம்
சீனாவிடம் சரண்டர்! கடந்த, 2020ல் நம் எல்லைகளை சீனா ஆக்கிரமிக்க முயன்றபோது, அதுபோல் எதுவும் நடக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி நற்சான்றிதழ் வழங்கினார். தற்போது, நம் நாட்டில் மின்சார வாகனம், மருந்து என பல துறைகளிலும் சீனாவின் இறக்குமதி, 100 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. சீனாவிடம் மோடி அரசு சரண்டர் ஆகியுள்ளது. மல்லிகார்ஜுன கார்கே தேசியத் தலைவர், காங்.,
உண்மையை திரிக்காதீர்கள்! வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி அளித்ததில் எங்கள் ஆட்சியில் முறைகேடு நடந்ததாக காங்.,கைச் சேர்ந்த கேரள முதல்வர் சதீஷன் கூறியுள்ளார். உண்மையை திரிக்கக் கூடாது. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது நல்லதுதான்; அப்போதுதான் முழு உண்மையும் வெளிவரும் பினராயி விஜயன் கேரள எதிர்க்கட்சித் தலைவர், மார்க்., கம்யூ.,
முதலில் செய்யுங்கள்! கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பா.ஜ.,வினர் கூறுகின்றனர். சரியான நேரத்தில் இது தொடர்பாக அரசு முடிவு எடுக்கும். முதலில் தாங்கள் ஆளும் மாநிலங்களிலும், தேசிய அளவிலும் இதை செயல்படுத்த, பா.ஜ., முன்வர வேண்டும். பிரியங்க் கார்கே கர்நாடக மாநில அமைச்சர், காங்.,