ஸ்ரீபெரும்புதுாருக்கு பி.டி.ஓ., நியமனம்

காஞ்சிபுரம், ஜூலை 10–

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரு துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பி.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் வட்டார நிர்வாகம் நிர்வகித்து வந்த பி.டி.ஓ., பாலாஜி என்பவர் கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நிர்வாக மேலாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வனிதா என்பவர் பணிபுரிந்து வந்தார்.

அவரை, ஸ்ரீபெரும்புதுார் வட்டார நிர்வாகம் நிர்வகிக்கும் பி.டி.ஓ.,வாக, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா பதவி உயர்வு அளித்து நியமித்துள்ளார்.

Advertisement