பிடதி டவுன்ஷிப் திட்ட வரைபடத்தின் மீது ரத்தம் தெளித்து விவசாயிகள் போராட்டம்
ராம்நகர்: பிடதி டவுன்ஷிப் திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகள், திட்டத்தின் வரைப்படத்தின் மீது ரத்தத்தை தெளித்து, நுாதன போராட்டம் நடத்தினர் .
ராம்நகரின் பிடதியில் டவுன்ஷிப் அமைக்க, 7,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பைரமங்களா உள்ளிட்ட கிராம மக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.
ஆனால் நிலம் கையகப்படுத்தும் முடிவில் இருந்து பின்வாங்க போவது இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
டவுன்ஷிப் திட்டத்திற்கு எதிராக, பைரமங்களா கிராமத்தில் நேற்று போராட்டம் நடத்திய விவசாயிகள், தங்களது உடலில் இருந்து ஒரு துளி ரத்தத்தை எடுத்து, டவுன்ஷிப் திட்ட வரைப்பட பேனர் மீது தெளித்து, நுாதன முறையில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் போராட்டம் நடத்தும் விவசாயி களுக்கு ஆதரவாக, லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டேயும் களம் இறங்கியுள்ளார். போராட்ட களத்திற்கு நேற்று சென்று, தனது ஆதரவை தெரிவித்தார்.
அவர் பேசியதாவது:
வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகள் நிலத்தை வலுக்கட்டாயமாக அரசு பறிக்க கூடாது. விவசாயிகள் உரிமைகள் மீறப்பட கூடாது. விவசாயிகள் போராடுவதை பார்க்க வேதனையாக உள்ளது. விவசாயம் வீழ்ச்சி அடைந்தால், எதிர்கால நிலைமை மோசமாகி விடும்.
இங்கு வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் அரசு பணம் நிர்ணயித்து உள்ளது. ஆனால், மீண்டும் மரம் வளர பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நிலத்தை பறித்து கொண்டு விவசாயிகளை வேறு வேலைக்கு செல்ல சொல்கின்றனர். நான் உயிருடன் இருக்கும் வரை, விவசாயிகளுடன் இணைந்து போராடுவேன்.
இவ்வாறு பேசினார்.
மேலும்
-
புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை சோதனை
-
இரு நாடுகளின் உணர்வில் கலந்தது கிரிக்கெட்; மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோடி நெகிழ்ச்சி
-
ஸ்பெயினில் பயங்கர காட்டுத்தீ; 12 பேர் பரிதாப பலி
-
ஹரியானாவில் போலீசார் - ரவுடி கும்பல் இடையே துப்பாக்கிச்சண்டை; 4 பேர் சுட்டுக் கொலை
-
ஜனநாயகன் படம் ஜூலை 24ம் தேதி ரிலீஸ்
-
தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்