ஜனநாயகன் படம் ஜூலை 24ம் தேதி ரிலீஸ்
நமது நிருபர்
முதல்வர் விஜய் நாயகனாக நடித்த ஜனநாயகன் படம் ஜூலை 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
தமிழக முதல்வர் விஜய் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். தேர்தலுக்கு முன்பாக சென்சார் சான்றிதழ் பெற்று, வெளியிட முயற்சித்தும் தணிக்கை வாரியம், சான்றிதழ் வழங்கவில்லை. தேர்தல் முடிந்து, வெற்றி பெற்று விஜய் முதல்வராகவும் பொறுப்பேற்று விட்டார். இந்த சூழ்நிலையில் ஜனநாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியிருப்பதாக தணிக்கை வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
படம் 183 நிமிடங்கள் (3 மணிநேரம் 3 நிமிடங்கள்) என்றும் தெரிவித்துள்ளனர்.
படம் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் ஜூலை 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வெளிநாடுகளில் உள்ள விநியோகஸ்தர்களுக்கு வெளியீட்டு தேதியை பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கனடாவைச் சேர்ந்த விநியோக நிறுவனமான 'யார்க் சினிமாஸ்' (York Cinemas), 'எக்ஸ்' (X) தளத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து விநியோகஸ்தர்கள் கூறியதாவது: ஜனநாயகன் படம் 24ம் தேதி வெளியிடப்படுவதால் இந்த மாதத்தில் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த பெரும்பாலான படங்கள் ஒத்திவைக்கப்பட வேண்டியிருக்கும்; ஏனெனில் முன்னும் பின்னும் வெளியாகும் படங்களின் மீது ஜனநாயகன் படம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜூலை 24ல் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தவர்கள் இப்போது வேறு தேதியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இதில் உள்ள சவால் என்னவென்றால், அடுத்த சில மாதங்களில் ஏறக்குறைய ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு பெரிய படம் வெளியாகவுள்ளதால், இந்தப் படங்கள் மாறுவதற்கு ஏற்ற தேதி எதுவும் எளிதில் கிடைக்காது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முதல்வரானபின் எம்.ஜி.ஆருக்கு மீனவ நண்பன், இவருக்கு ஜனநாயகன்
இந்த படம் பார்க்க வரும் பொது மக்கள் எத்தனை பேர் கூட்ட நெரிசலில் போய் சேர போகிறார்களோ, போனால் ஒன்னும் கவலை கிடையாது 20 லட்சம் குடுமபத்து ஒரு அரசு வேலை கண்டிப்பாக கிடைக்கும் அப்படியே ஒரு மணிமண்டபம் கூட.
பாதி பேர் பார்த்துவிட்டாங்க, No worries.
ஜனநாயகன் படம் பற்றி செய்தி வெளியிடுவதில் தவறொன்றும் இல்லை. திராவிடம் தமிழகத்தில் நுழைந்த நாளில் இருந்து சினிமாவும் மக்கள் வாழ்வில் நுழைந்து விட்டது. பிற மாநிலத்தவர் நம்மை ஆள்வதற்கு கொண்டு வரப்பட்டது திராவிடம், அந்த திராவிடத்தை சினிமாவில் வளர்த்தார்கள், திராவிடம் என்ற நஞ்சை மக்களிடம் விதைத்தார்கள். அந்த சினிமா இன்று திராவிடத்தை அழித்துக் கொண்டிருக்கின்றது. திராவிடம் முற்றாக அழியும் நாள் தமிழத்தின் பொன்னாள்.
இதெல்லாம் ஒரு செய்தி 1967 இல் பெருந்தலைவர் காமராஜை தோற்க வைத்த தமிழ்நாட்டிற்கு இன்னும் நிறைய பாக்கி இருக்கிறது
இது ரொம்ப ரொம்ப முக்கியம்.
ஆன்லைனில் ஒண்ணேகால் கோடி பேர் பார்த்துவிட்டனர். இனிமே வயசுக்கு வந்தா என்ன, வராட்டி என்ன ஜோக்தான் நினைவுக்கு வருகிறது.
அறிவில் சிறந்து இருந்த தமிழ்நாடு 1960 களில் சினிமா அரசியல் தொடங்கியதில் இருந்து தொடங்கிய அறிவு வீழ்ச்சி இன்று அறிவு வீழ்ச்சியின் உச்சத்தில் கேவலப்பட்டு போய் இருக்கிறது
correct
சூப்பரா காண்டு ஆனவங்க சில பேர் இங்கே பதிவு போட்டு இருக்காங்க. தீய கட்சியின் 200 உபீஸ் இன்னும் ஆக்ட்டிவா இருக்கானுங்க
விஜயபாஸ்கர்கள் கட்டவுட்டுக்கு மாலை போட்டு பால் அபிஷேகம் பண்ணி முதல் ஷோ பார்த்தால் புஸ்சியின் மனம் குளிரும்
எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சரான பிறகுதான் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படம் வெளியானது. எம்.ஜி.ஆர் 1977 ஜூன் 30 அன்று முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடைய கடைசி வரலாற்று அதிரடித் திரைப்படம் சில மாதங்களுக்குப் பிறகு, 1978 ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியானது. இதே போன்ற ஒரு தற்செயல்தான், முதலமைச்சர் விஜய் முதலமைச்சரான பிறகு அவருடைய ஜனநாயகம் வெளியானது. எம்.ஜி.ஆரின் மரணம் வரை திமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை. விஜய் மிகவும் இளமையாகவும் உடற்தகுதியுடனும் இருக்கிறார், எனவே திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது ஒரு பெரிய கேள்வியாக உள்ளது.
அய்யா... அங்குசாமி...? ரொம்ப பீத்திக்காத... “நீர் குமிழி வாழ்க்கை”தான் மனித வாழ்க்கை...? இப்படித்தான் 2011, 2016ல் நிரந்தர முதல்வர்..னு ஆதி முதல் அந்தம் வரையிலான அனைத்து விளம்பரங்களிலும் மேடைகளிலும் ஜெயலலிதாவை அழைத்தார்கள்... காலம்... ஓராண்டிலேயே தன்னிடம் சேர்த்துவிட்டது... அந்தம்மா இன்னும் கொஞ்சநாள் உசுரோட இருந்திருப்பாங்க... இவனுங்க, “நிரந்தர முதலமைச்சர், நிரந்தரம்”னு கூவிகிட்ட இருக்கவே... காலம் “யாருடா அது நிரந்தரம்” அப்படீன்னு சொல்லி... தன்னிடம் அழைத்துக் கொண்டது... அதுபோல... அற்ப மனிதப் பிறவி...யை கடவுள் ரேஞ்சுக்கு கொண்டு போய்டாத...?மேலும்
-
மஸ்ட் கல் குவாரிக்கு எதிர்ப்பு நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்
-
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 11 க்குரியது
-
ராமநாதபுரம் ஏரியாவில் சேர்த்து கொள்ளவும் –––––– ராமேஸ்வரம் கோயில் வீதியில் பக்தர்கள் கூடுதல் ஓய்வு கூடம் அமைக்கப்படுமா
-
நிறைகுளத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
-
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு உதவ சிறப்பு கட்டுப்பாட்டு அறை
-
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ரேஷனில் கைரேகை பதிவு கட்டாயம்