இளமையில் பக்தியை கற்றுத்தர வேண்டும் திருச்சி கல்யாணராமன் பேச்சு

மதுரை:குழந்தைகளுக்கு இளமையிலேயே பக்தியை கற்றுக் கொடுக்க வேண்டும் என மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் நடந்த கம்பராமாயண தொடர் பக்தி சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமன் தெரிவித்தார்.

மதுரை கூடல்நகர் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவர் க்ருஹத்தில் இரண்டு வரம் எனும் தலைப்பில் அவர் பேசியதாவது:

ஆண், பெண் இருவரும் சமம் என்றாலும் பெண்கள் தான் கெட்டிக்காரர்கள். ஆண்களுக்கு பொறுப்பும் எதிர்பார்ப்பும் அதிகம். பெண்கள் மற்றவர்களை சார்ந்திருப்பர்.

ஒவ்வொருவரும் சகிப்புத் தன்மையோடு இருக்க வேண்டும். ஒரு வில் ஒரு சொல் ஒரு இல்.. இந்த குணங்களே ராமனின் பெருமையை காட்டுகிறது. ராமனுக்கு நிகர் உலகில் யாரும் இல்லை என்று தியாக பிரம்மம் பாடுகிறார்.

குழந்தைகளுக்கு இளமையிலேயே பக்தியை கற்றுக் கொடுக்க வேண்டும். இன்பம் வரும் போது சந்தோஷப்படக்கூடாது. துன்பம் வரும்போது துக்கப்படக்கூடாது என்று வள்ளுவர் கூறுகிறார்.

ஒவ்வொருவரும் பாவ புண்ணியம் செய்திருப்பார்கள். இன்ப, துன்பத்தை மறந்து சகிப்புத்தன்மையோடு வாழ வேண்டும். எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று நமது மதம் சொல்கிறது. யாரிடமும் விரோதம் கூடாது. யாருக்கும் தீங்கு செய்யாமல் எல்லா ஜீவனிலும் பகவான் இருக்கிறார் என்று உணர வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

ஜூலை 19 வரை, தினமும் மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திருச்சி கல்யாணராமனின் சொற்பொழிவு நடக்கிறது .

ஏற்பாட்டினை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

Advertisement