கல்லுாரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாயமான கல்லுாரி மாணவி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகள் மகிஷ்நவி, 20; இவர், தலைவாசல் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., மூன்றாமாண்டு படிக்கிறார். கடந்த 8ம் தேதி காலை வழக்கம்போல் கல்லுாரிக்கு புறப்பட்டு சென்ற மகிஷ்நவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன மகள் மகிஷ்நவியை கண்டுபிடித்து தரக்கோரி இவரது தாய் சாந்தி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement