விவசாய கூலி தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே மனைவியுடன் ஏற்பட குடும்ப தகராறில் கணவர் குடிபோதையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரகண்டநல்லுார் அடுத்த கடகால் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது யூனிஸ் மகன் ம்ஷ்ரப், 27; விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி ஆஷிக். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவி ஆஷிக் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த ம்ஷ்ரப் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள புங்க மரத்தில் துாக்கு போட்டுக் கொண்டார். இதனை கண்ட அவரது சகோதரர் சதாம் உசேன், துாக்கில் தொங்கிய ம்ஷ்ரப்பை மீட்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இது குறித்து அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement