ஊழலை ஒழித்ததே முதல்வரின் சாதனை: மதிமுக வைகோ பாராட்டு

14

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ நேற்று அளித்த பேட்டி:

முந்தைய தி.மு.க., ஆட்சியில் அனைத்து துறைகளிலும் கமிஷன், ஊழல் தலைவிரித்தாடியது. முதல்வர் விஜய் பதவியேற்ற பிறகு கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெறுவதற்கு கூட தற்போது யாரும் பணம் கேட்பதில்லை என, பள்ளி நிர்வாகிகளே கூறுகின்றனர்.

இப்படி, ஊழல் மற்றும் கமிஷன் முறையை ஒழித்ததே முதல்வர் விஜயின் மிகப்பெரிய சாதனை. யார் ஊழல் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெளிவாக கூறியுள்ளார். ஊழல் செய்த அதிகாரிகள் யார் என்பது முதல்வருக்கு தெரியும்.

திருச்சி எம்.பி., துரை வைகோ ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதல்ல. அவர் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தி.மு.க., - எம்.பி.,க்கள் ராஜினாமா செய்தால், துரை வைகோவும் ராஜினாமா செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement