மஸ்ட் கல் குவாரிக்கு எதிர்ப்பு நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்

சிங்கம்புணரி, ஜூலை 11-

சிங்கம்புணரி அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜெயங்கொண்டநிலை கிராமத்தையொட்டி மதுரை மாவட்டம் எல்லையான இ.மலம்பட்டி, கிருஷ்ணாபுரம் அருகே தனியார் கிரஷர் குவாரி செயல்படுகிறது. இங்கு தற்போது கல்குவாரி அமைத்து கற்களை தோண்டி எடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

ஜெயங்கொண்ட நிலை கிராமத்தில் இருந்து சில மீட்டர் தூரத்திலும், 450 ஏக்கர் பரப்பு கொண்ட சித்தமல்லி கண்மாய் அருகேயும் இந்த கல்குவாரி அமைக்கப்பட்டால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த கல்குவாரி அமைவதை எதிர்த்து நாம் தமிழர் சார்பில் சிங்கம்புணரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன் தலைமை வகித்தார். உழவர் பாசறை இணைச் செயலாளர் சிவராமன், மண்டல செயலாளர் பார்த்தசாரதி, மாநில பொறுப்பாளர் பொன்.வைரக்குமார் பேசினர். மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், திருமாறன், மதுபாலன், தனுஷ்கோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement