நிறைகுளத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளத்தில் நிறைகுளத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கணபதி ஹோமம் துவங்கி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தனபூஜை, முதல் கால யாக பூஜைகள், மூல மந்திரங்கள், பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு கோபூஜை, லட்சுமி பூஜை, இரண்டாம் கால யாகபூஜை, பூர்ணாஹூதி, கலச புறப்பாடுக்கு பிறகு சிவாச்சாரியார்கள் தலைமையில் கும்பநீர் ஊற்றப்பட்டது.
நிறைகுளத்து அய்யனாருக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முதுகுளத்துாரை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செவிலியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
-
பயிர்க்கடன் தள்ளுபடி பெறும் விவசாயிகள் பட்டியல் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆய்வு
-
அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவ பிரிவு கட்டடம் துவக்கம்
-
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கார் மீது கல்வீச்சு ‘மாஜி’ அமைச்சர் மீது புகார்: செஞ்சி அருகே பதற்றம்
-
முந்திரி பண்ணைக்கு நடமாடும் வாகனம் வழங்கல்
-
வானில் மழையென பொழிந்த மாங்கனிகள் விதைகளாக விழுந்து விருட்சமாகிறது காரைக்கால் நகராட்சியின் அசத்தல் முயற்சி
Advertisement
Advertisement