பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு உதவ சிறப்பு கட்டுப்பாட்டு அறை
ராமநாதபுரம்: மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்களும், தங்களுக்கு உதவித்தொகை தொடர்பாக ஏதேனும் தேவை, சந்தேகம் அல்லது சிக்கல் இருப்பின் உதவி செய்யும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.
இதன் மூலம் பல்வேறு உதவித்தொகை திட்டங்கள் குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை, தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதி, நிபந்தனைகள் பற்றிய தெளிவான தகவல்கள், ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏற்படும் தொழில் நுட்ப சிக்கல்கள் மற்றும் பிற தடங்கல்களுக்கான உடனடி தீர்வு வழங்கப்படும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அல்லது தாமதமானால், அதற்கான காரணத்தை அறிந்து கொண்டு சரி செய்யும் வழிமுறைகள், உதவித்தொகை மாணவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது தொடர்பான புகார்கள் மற்றும் விசாரணைகளுக்கு கட்டுப்பாட்டு அறையின் 90871 07139 என்ற அலைபேசி எண்ணிலும், நேரடியாகவும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிவகுருபிரபாகரன் தெரிவித்துள்ளார்.––––––