இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 11 க்குரியது

கோயில்

* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

* ஆனி பிரம்மோற்ஸவம் – தேரோட்டம்: ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், மீனாட்சிபுரம் 2வது தெரு, மதுரை, அதிகாலை 5:30 முதல் காலை 6:30 மணிக்குள், வைகை தென்வடகரை பஜ்ஜிகொண்டா படித்துறை மண்டபத்தில் தீர்த்தவாரி உற்ஸவம், காலை 10:30 முதல் மதியம் 12:00 மணிக்குள், புஷ்பபிரபை திருவீதி புறப்பாடு, இரவு 7:00 மணி.

* கோயில் உற்ஸவ விழா: பாதாளமாரி அம்மன், முனியாண்டி சுவாமி கோயில்கள், மணிநகரம் மெயின் ரோடு, மதுரை, அன்னதானம், மதியம் 12:00 மணி, மாவிளக்கு, முளைப்பாரி நகர்வலம், இரவு 9:00 மணி, அம்மன், சுவாமிக்கு சிறப்பு ஆராதனை, அதிகாலை 12:00 மணி, அம்மன் புஷ்ப பல்லக்கில் நகர்வலம், அதிகாலை 1:00 மணி.

* கோயில் ஆண்டு உற்ஸவம்: சந்தன மாரியம்மன் கோயில், சொக்கலிங்க நகர் மெயின் ரோடு, மதுரை, பொங்கல் வைத்தல், அதிகாலை 5:00 மணி, முளைப்பாரி கரைத்தல், காலை 7:00 மணி, பெண்கள், சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், காலை 10:30 மணி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருப்பாவை திருவெம்பாவை பயிற்சி பள்ளி ஆசிரியை விசாலாட்சி அம்மாள் தலைமையில் திருவிளக்கு பூஜை, மாலை 6:00 மணி.

* கோயில் ஆண்டு உற்ஸவம்: மாரியம்மன் கோயில், ரயில்வே காலனி, மதுரை, பொங்கல் வைத்து மாவிளக்கு நேர்த்திக்கடன், காலை 6:00 மணி, சக்தி கரகம், முளைப்பாரி ஊர்வலம், அம்மன் தேர்பவனி, மாலை 6:30 மணி, அன்னதானம், இரவு 8:30 மணி.

* பொங்கல் திருவிழா: கொத்தாலத்து முனியாண்டி சுவாமி கோயில், அய்யன்பாப்பாக்குடி, அவனியாபுரம், மதுரை, பால்குடம், காலை 7:30 மணி, அன்னதானம், காலை 9:00 மணி, மாவிளக்கு ஊர்வலம், மாலை 5:00 மணி.

* சனிக்கிழமை சிறப்பு பூஜை: ஆதி கிருஷ்ணன் கோயில், பொன்மேனி நகர், உத்தங்குடி, மதுரை, ஏற்பாடு: உத்தங்குடி யாதவ மகா சபை, மாலை 6:00 மணி.

* சனிக்கிழமை சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், மந்தைத்திடல் வளாகம், கீழையூர், ஏற்பாடு: கீழையூர் யாதவ மகா சபை, மாலை 6:00 மணி.

* சனிக்கிழமை சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ் எதிரில், மேலுார், ஏற்பாடு: மேலுார் யாதவ மகா சபை, மாலை 6:00 மணி.

* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* பாதுகா பட்டாபிஷேகம் – கம்பராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் – திருச்சி கல்யாணராமன், மஹா பெரியவர் கோயில், வ.உ.சி., தெரு, ஆனையூர் மெயின் ரோடு, கூடல்நகர், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* பகவத்கீதை: நிகழ்த்துபவர் – சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

* தாயுமானவர்: நிகழ்த்துபவர் – சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் ‘சத்தர்ஸனம்’ விளக்கவுரை, காலை 9:15 மணி.

* விஷ்ணு புராணம் – கேள்வியும் முறையும்: நிகழ்த்துபவர் – முகுந்தராஜன், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, மாலை 6:45 மணி.

* ஆன்மிக சொற்பொழிவு, கூட்டுப்பிரார்த்தனை: நிகழ்த்துபவர் – ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, இரவு 7:00 மணி.

* திருமூலர் திருமந்திரம்: நிகழ்த்துபவர் – சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

* வருடாந்திர முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: பாபா அணு ஆராய்ச்சி மைய இயற்பியல் குழு ஓய்வு பெற்ற இயக்குநர் சகுந்தலா, ஓய்வுபெற்ற முதன்மை மாவட்ட நீதிபதி மீனா சதீஷ், பையர் பீ டெக்னோ சர்வீசஸ் சேர்மன் பிரியா பாலன், காலை 9:30 மணி. 

பொது

* மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா: மல்லிகை திருமண மகால், ஹார்விபட்டி, மதுரை, தலைமை: மக்கள் நலமன்ற தலைவர் அய்யல்ராஜ், சிறப்பு விருந்தினர்கள்: முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், ஏற்பாடு: ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம், காலை 10:15 மணி.

* வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழா: யாதவர் ஆண்கள் கல்லுாரி, திருப்பாலை, ஏற்பாடு: தமிழ்நாடு யாதவ மகாசபை, காலை 10:00 மணி, பென்னிகுயிக் பஸ் ஸ்டாண்ட், மேலுார், ஏற்பாடு: மேலுார் யாதவ மகாசபை, காலை 10:00 மணி, 

மருத்துவம்

* உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* நிறுவனர் டாக்டர் மனோரமா பிறந்த மாதத்தை முன்னிட்டு குழந்தையில்லா தம்பதிக்கான மருத்துவ முகாம்: சுமதி கருத்தரித்தல் மையம், சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.

* இலவச மருத்துவ முகாம்: மணிமேகலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: எம்.எல்.ஏ., கோபிசன், முன்னிலை: டாக்டர்கள் சந்தோஷ் லெனின், பிரசன்னா லெனின், ஏற்பாடு: டிசி கேர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஆர்.ஆர். ஹெல்த் அண்ட் டெவலப்மென்ட் பவுண்டேஷன், காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை.

கண்காட்சி

* அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

* கோ–ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயற்கண்ணி கோ–ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெண்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.

* மான்சரோவர் – ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர் மெயின் ரோடு, மிலன் மால் அருகில், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

* சேலைகள், சல்வார்கள் விற்பனை: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: ஹியூஸ் பொட்டிக், காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை. 

Advertisement