மாநகராட்சி முறையாக திட்டமிடாததால் ரூ.31 கோடி வீணடிப்பு! கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை விரிவாக்கத்தில் குழப்பம்
சென்னை: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், 31 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை விரிவாக்க பணிகள், சரியான திட்டமிடல் இன்றி நடந்து வருவதால், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம், மீட்கப்பட்ட ரேஸ்கோர்ஸ் இடத்தின் ஒரு பகுதியை பெறுவதில் தாமதம், சாலையை விரிவாக்காமல் நடைபாதை விரிவாக்கம் போன்ற குளறுபடிகளால், மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகர பேருந்து என, முக்கிய வழித்தடங்கள் உடைய பகுதியாக கிண்டி உள்ளது. கிண்டி ரயில் நிலைய வடக்கு திசையில் உள்ள சிட்கோ பேருந்து நிலையம், ரேஸ்கோர்ஸ் பேருந்து நிலையம் இடையே, மின்சார ரயில், மெட்ரோ ரயில் வசதி உள்ளது. அதனால், பயணியர் கூட்டம் அலைமோதும். இதில், ரேஸ்கோர்ஸ் பேருந்து நிலையம், அதை ஒட்டிய சாலை குறுகலாக உள்ளதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு செல்ல சுரங்கப்பாதை, நடைமேம்பாலம் என, பாதுகாப்பு அம்சம் எதுவும் இல்லாததால், சாலையை கடக்கும்போது பயணியர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
நெரிசல்
இதனால், ரேஸ்கோர்ஸ் பேருந்து நிலையத்தை மேம்படுத்தவும், குறுகி யுள்ள 60 அடி அகல சாலையை, 1 கி.மீ., துாரத்திற்கு, 100 அடியாக விரிவாக்கம் செய்யவும், மாநகராட்சி முடிவு செய்தது. மேலும், ரேஸ்கோர்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து நடைமேம்பாலம் அமைத்து, ரயில்வே நடைமேம்பாலத்துடன் இணைத்து, சிட்கோ பேருந்து நிலையம் வரை முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக உலக வங்கி, மாநில உள்கட்டமைப்பு மற்றும் மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து, 31.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, டி.எம்.எஸ்., என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதற்கான பணி கடந்தாண்டு தொடங்கியது. இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேவையான நிலங்களை ஆர்ஜிதம் செய்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை 30 சதவீத ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. மேலும், அரசு மீட்டெடுத்த ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் குறிப்பிட்ட பகுதியை, திட்டப்பணிக்காக நில ஆர்ஜிதமும் செய்யவில்லை.
இதனால், ஏற்கனவே குறுகிய அளவில் உள்ள சாலையிலேயே மேம்பாட்டு பணி நடக்கிறது. பழைய நிலையிலேயே வடிகால், நடைபாதை பணிகள் நடக்கின்றன. அதுவும் 170 மீ., நீளத்தில், 2 அடி அகல வடிகால் நல்ல நிலையில் இருந்தும், அதன் அருகில் 3 அடி அகல வடிகால் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. மேலும், 4 அடி அகலத் தில் நடைபாதை கட்ட வேண்டிய இடத்தில், சாலை விரிவாக்கம் செய்யாமல், 10 அடி அகலத்தில் நடைபாதை அமைக்கப்படுகிறது. இதனால், அங்குள்ள வளைவு பகுதியில், 40 அடி சாலை 20 அடியாக குறைந்து, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது: தாம்பரம் ரயில்வே நடைமேம்பாலத்தை, கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பேருந்து நிலையங்களுடன் இணைத்தது போல், கிண்டியிலும் இணைக்கப்படும் என, காத்திருந்தோம். சாலையை விரிவாக்கம் செய்யாமல், இருக்கிற சாலையில், 10 அடி அகல நடைபாதை அமைப்பதால், சாலை மேலும் குறுகலாகிவிட்டது.
நடவடிக்கை
ஏற்கனவே, வடிகால் நல்ல நிலையில் இருந்தும், அதன் அருகில் புதிதாக வடிகால் கட்டப் படுகிறது. நடைமேம்பாலம் கட்டும் பணியை, மாநகராட்சி, ரயில்வே, நெடுஞ்சாலைத்துறை, சிட்கோ நிர்வாகம் சேர்ந்து செய்திருக்க வேண்டும். துறைகள் இடையே ஒருங்கிணைப்பு, முறையான திட்டமிடல் இல்லாத தால், சிறப்பு திட்டத்திற்கான மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. துறை வாரியான ஒருங்கிணைப்பை பலப்படுத்த, மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: நிர்வாக குளறுபடி, ஆட்சி மாற்றம், அதிகாரிகள் மாற்றம் காரணமாக, பணியில் சில தொய்வுகள் ஏற்பட்டன. மீட்கப்பட்ட ரேஸ்கோர்ஸ் இடத்தை ஆர்ஜிதம் செய்ய, சம்பந்தப்பட்ட துறைகள் ஒப்புதல் வழங்கவில்லை. குறிப்பிட்ட அவகாசத்தில் பணியை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், இருக்கிற இடத்தில் பணிகளை செய்கிறோம். பழைய வடிகால் அருகே புதிதாக வடிகால் கட்டுவது குறித்து விசாரிக்கப்படும்.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைமேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும். சிட்கோ பேருந்து நிலையம் பகுதியில், நடைமேம்பாலம் கட்டும் பணிகள் நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
@block_B@
நடைமேம்பாலம், லிப்ட், மாற்றுத்திறனாளிகள்செல்ல தனி பாதை, குடிநீர், கழிவுநீர் குழாய் பதிப்பு, மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள் செல்ல தனி கட்டமைப்பு, இயற்கை எரிவாயு செல்ல தனி குழாய், புதிய வடிகால் வசதி, கட்டடகலை அலங்கார விளக்குகள், புல்வெளி, பயணியர் அமர நவீன இருக்கைகள், மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய தனி வசதி உள்ளிட்ட கட்டமைப்புகளுடன், ரேஸ்கோர்ஸ் பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது.block_B
என்னென்ன பணிகள் என ஒரு கனவுலக பட்டியலை வெளியிட்டிருக்கிறீகள் . கனவு நனவாவ்குமா என்பது கேள்விக்குறியே ?
தேவையற்ற வேலைகளை செய்து துட்டு அடிப்பதென்பது திருட்டு திராவிடத்தின் சமயோஜித ஐடியா. புதிய முதல்வர் விஜய் மக்களின் வரிப்பணம் வீணடிப்பவர்களை கண்டறிந்து அவர்களிடமிருந்து அதை வசூலிக்க வேண்டும்.மேலும்
-
மஸ்ட் கல் குவாரிக்கு எதிர்ப்பு நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்
-
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 11 க்குரியது
-
ராமநாதபுரம் ஏரியாவில் சேர்த்து கொள்ளவும் –––––– ராமேஸ்வரம் கோயில் வீதியில் பக்தர்கள் கூடுதல் ஓய்வு கூடம் அமைக்கப்படுமா
-
நிறைகுளத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
-
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு உதவ சிறப்பு கட்டுப்பாட்டு அறை
-
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ரேஷனில் கைரேகை பதிவு கட்டாயம்