விமான உற்பத்தித்துறை பாதிப்பு; இறக்குமதி வரிகளை நிறுத்தியது அமெரிக்கா
வாஷிங்டன்: வணிக விமான உற்பத்தித்துறை சார்ந்த இறக்குமதி பொருட்களுக்கான வரியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்றதில் இருந்து மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை உயர்த்தி வந்தார். குறிப்பாக, இரும்பு, அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற துறைகளைக் குறிவைத்து கடுமையான வரிகளையும் விதித்துள்ளார்.
இந்த வர்த்தக வரிகளில் பெரும்பாலானவை உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட போதிலும், குறிப்பிட்ட சில துறைகள் சார்ந்த அவரது வரிகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. இது அமெரிக்காவுக்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கூடுதல் வரிகளால் அமெரிக்காவுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அந்நாட்டு வர்த்தக அமைச்சகம் விசாரணை நடத்தியது. அதில், வெளிநாடுகளின் நடவடிக்கைகள் அமெரிக்காவின் வணிகப் விமான உற்பத்தித் துறையை தொடர்ந்து பாதித்து வருவதாகவும், அமெரிக்கா வெளிநாட்டு விநியோகச் சங்கிலிகளை அளவுக்கு அதிகமாகச் சார்ந்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சகத்தின் விசாரணையில் தெரிய வந்தது.
எனவே, வணிகப் விமானங்கள், ஜெட் ,இன்ஜின்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் இறக்குமதி மீது உடனடியாக எந்த வர்த்தக வரியும் விதிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.
அதன்பேரில், வணிக விமானங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் இறக்குமதி மீதான வரியை அதிபர் டிரம்ப் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
டிரம்ப் அவர்கள் இறக்குமதி வரியை அன்று உயர்த்தியபோதே பலர் கருத்து தெரிவித்தனர், இதனால் மிகவும் பாதிக்கப்படப்போவது முதலில் அமெரிக்கா என்று. டிரம்ப் கேட்கவில்லை. இன்று இறக்குமதி வரிகளை நிறுத்துகிறார். பட்டால்தான் ஒருசிலருக்கு புரிகிறது. டிரம்ப் அந்த வகை.மேலும்
-
மஸ்ட் கல் குவாரிக்கு எதிர்ப்பு நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்
-
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 11 க்குரியது
-
ராமநாதபுரம் ஏரியாவில் சேர்த்து கொள்ளவும் –––––– ராமேஸ்வரம் கோயில் வீதியில் பக்தர்கள் கூடுதல் ஓய்வு கூடம் அமைக்கப்படுமா
-
நிறைகுளத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
-
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு உதவ சிறப்பு கட்டுப்பாட்டு அறை
-
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ரேஷனில் கைரேகை பதிவு கட்டாயம்