சசங்கமித்ரா மருத்துவமனை 3ம் ஆண்டு துவக்க விழா
கடலுார்: கடலுார், மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் நுரையீரல் மற்றும் ரத்தக் குழாய் சிகிச்சை மையமான சங்கமித்ரா மருத்துவமனை, 3 ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
மருத்துவமனை நிர்வாக இயக்குநர் லாவண்யா இளமாறன் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றினார். மருத்துவமனை இயக்குநர் இளமாறன், இனிப்பு வழங்கினார்.
விழாவில், டாக்டர் ஸ்ரீதரன், பாலாஜி லேப் ராமலிங்கம், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை இயக்குநர் இளமாறன் கூறுகையில், ‘கடலுார், விழுப்புரம், புதுச்சேரியிலேயே சங்கமித்ரா மருத்துவமனையில் தான் முதல் முறையாக அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கம் துவங்கப்பட்டுள்ளது.
இதனால் பாதுகாப்பாகவும், விரைவில் குணமடையும் விதத்தில் ரத்த நாள அறுவை சிகிச்சை, ரத்த குழாய் அடைப்பு, திறந்த ஆஞ்சியோ முறைகள், லேப்ராஸ்கோபி, நுரையீரல் அறுவை சிகிச்சை, மூச்சு குழாய், லேசர் மற்றும் அதிநவீன முறையில் வெரிகோஸ் வெயின் அறுவை சிகிச்சை, நீரிழிவு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றார்.
ஏற்பாடுகளை மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் செய்திருந்தனர்.
மேலும்
-
பெண்கள் பள்ளி இல்லாத திருப்பாசேத்தி
-
வேம்பத்துாரில் முறிந்த மின்கம்பம் அச்சத்தில் பொது மக்கள்
-
திருப்புத்துாரில் ஆவின் பால் தட்டுப்பாடு
-
காசியை மாற்றியமைக்க கங்கை, வருணா வழித்தடங்கள்; ரூ.25,000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
-
அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார கண்காணிப்பு குழுவில் இந்தியர்கள் மூவர்!
-
பழநி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி; சிபிசிஐடி விசாரணை தீவிரம்