பஸ் ஸ்டாண்டில் அரைகுறைபணியால் பயணிகள் அவதி
தேனி, ஜூலை 12–தேனி புதிய பஸ் ஸ்டாண்டில் அரைகுறையாக முடிக்கப்பட்டுள்ள சீரமைப்பு பணியால் பயணிகள் விழுந்து காயமடைகின்றனர்.
தேனி நகராட்சிக்குட்பட்ட பஸ் ஸ்டாண்டில் முதல் பிளாட்பாரத்தில் மதுரை, போடி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதில் எஸ்.இ.டி.சி., பஸ்கள், போடி பஸ்கள் நிறுத்தும் பகுதியில் சில மாதங்களுக்கு முன் சேதமடைந்த சிமென்ட் தரைத்தளத்தை சீரமைக்கும் பணி துவங்கியது. பணிகள் அரைகுறையாகவும், மற்றொரு பகுதியுடன் இணைக்காமலும் மேடு பள்ளமாக விடப்பட்டுள்ளது. அப்பகுதி வழியாக நடந்து செல்லும் பயணிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். பயணிகளை இறக்கிவிட டூவீலர்களில் வருபவர்களும் விழுந்து காயமடைகின்றனர். பள்ளங்களை சீரமைக்கவும் அல்லது பணிகள் முடியும் வரை பஸ்களை அடுத்த பிளாட்பாரம் வழியாக இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.