பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்

35

சென்னை: பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88.


ஆந்திராவின், குண்டூர் மாவட்டத்தின் ரிபேலே பகுதியில் 1938 ம் ஆண்டுஏப்.,23ம் தேதி பிறந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஒடியா, துலு, பஞ்சாபி, வங்காளம் , கொங்கணி உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரம்பாடல்களை பாடி உள்ளார்.


தமிழில் 1957 ம் ஆண்டு விதியின் விளையாட்டு என்ற படத்தில் அறிமுகமானார். பல்வேறு கச்சேரிகளிலும் பாடல்களை பாடி உள்ளார். பத்மபூஷண், 4 முறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

கடந்த சில நாட்களாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று( ஜூலை 11) அவர் காலமானார்.



@block_Y@

இறுதிச்சடங்கு!

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் இறுதிச் சடங்கு, மைசூரு மாவட்டம் எச்.டி. கோட்டை தாலுகாவில் உள்ள கனியனஹண்டி கிராமத்தில் அமைந்துள்ள அவரது சொந்தப் பண்ணையில், முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறும். முன்னதாக அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்படுகிறது. block_Y



@block_G@

லண்டன் நிகழ்ச்சியில் இளையராஜா அஞ்சலி

லண்டன் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது: எஸ்.ஜானகி இறைவனடி சேர்ந்துவிட்டார்.அவர் உழைப்பு அதிகம். என்னுடைய 50 ஆண்டு இசை பயணத்தில் அவரோடு நிறைய பாடல்களில் பணியாற்றி இருக்கிறேன். அவர் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவருக்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துங்கள். இவ்வாறு இளையராஜா பேசினார். block_G




@block_P@

என் வாழ்வில் துயரமான நாள் : பி சுசீலா உருக்கம்

மூத்த பாடகி பி சுசீலா வெளியிட்ட இரங்கல் செய்தியில், "என் வாழ்வில் மிக துயரமான நாள். இசைத்துறையில் ஒரு புகழ்பெற்ற சக கலைஞர் என்பதைத் தாண்டி, என்னுடைய உண்மையான தோழியையும், சகோதரியுமான எஸ். ஜானகியை இழந்துவிட்டேன்.

இசைத்துறையில் கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களை (50 ஆண்டுகள்) ஒன்றாக கழித்த நாங்கள், பல மொழிகளில் எண்ணற்ற மெல்லிசைப் பாடல்களையும், அழகான, வாழ்நாள் முழுவதுமான ஒரு பந்தத்தையும் பகிர்ந்து கொண்டோம்.

அவருடைய பிரிவு இசை உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. என் அன்பிற்குரிய ஜானகி, நீ லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்வாய்" என தெரிவித்துள்ளார். block_P



@quote@தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் என பிரபலங்கள் அடுத்தடுத்து காலமானார்கள். நேற்று முன்தினம் ஒளிப்பதிவாளர், இயக்குனர் செழியன் காலமானார். தற்போது ஜானகி காலமாகியுள்ளார். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. quote


அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வாழ்க்கை வரலாறு



இயற்பெயர் : எஸ் ஜானகி

பிறப்பு : 23-ஏப்ரல்-1938

பிறந்த இடம் : குண்டூர் , ஆந்திரா

பெற்றோர் : ராமமூர்த்தி - சத்யவதி

சினிமா அனுபவம் : 1957-2017

கணவர் : ராம்பிரசாத் (இறப்பு)

வாரிசு : முரளிகிருஷ்ணா (இறப்பு)

பட்டம் : நைட்டிங்கேள் ஆப் சவுத் இண்டியா

இறப்பு : 11-ஜூலை-2026

விருது



1. 1977ல் சிறந்த பின்னணி பாடகிக்கான 'தேசிய விருது'; '16 வயதினிலே' திரைப்படத்தில் 'செந்தூர பூவே' பாடல்

2. 1981ல் சிறந்த பின்னணி பாடகிக்கான 'தேசிய விருது'; 'ஒப்போல்' என்ற மலையாளப் பாடல்

3. 1984ல் சிறந்த பின்னணி பாடகிக்கான 'தேசிய விருது' ;'சித்தாரா' என்ற தெலுங்கு படத்தில் பாடியதற்காக

4.1992ல் சிறந்த பின்னணி பாடகிக்கான 'தேசிய விருது'; 'தேவர் மகன்' திரைப்படத்தில் 'இஞ்சி இடுப்பழகா' பாடல்

5. சிறந்த பின்னணி பாடகிக்கான 'தமிழ் நாடு அரசு விருது' 6 முறை வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.

6. சிறந்த பின்னணி பாடகிக்கான ஆந்திர அரசு விருதான 'நந்தி விருது' 10 முறை வழங்கப்பட்டது

7. சிறந்த பின்னணி பாடகிக்கான 'கேரள மாநில சினிமா விருது' 11 முறை வழங்கப்பட்டது

8. தமிழக அரசால் 'கலைமாமணி விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

9.1986ல் சிறந்த பின்னணி பாடகிக்கான 'பிலிம் பேர் விருது' 'சாஹேப்' என்ற ஹிந்தி படத்திற்காக

10. மைசூர் பல்கலை கழகத்தால் 'கவுரவ டாக்டர் பட்டம்'

11. 2013ல் இந்திய அரசு 'பத்ம பூஷன்' விருது அறிவித்தது. ஆனால் இதனை நிராகரித்தார்.

Advertisement